பாரதிகண்ணம்மா சீரியலின் இறுதி முடிவு!? கண்ணம்மா பகிர்ந்த புகைப்படம்.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் முதல் பாகம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் கதை தற்போது நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது.
பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் எப்போது முடிவடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த இருக்கும் நிலையில் தற்போது அந்த சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா தேவி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்வதாக இருக்கிறது.

பல வருட எதிர்பார்ப்பு
விஜய் டிவியில் நான்கு வருடங்களாக நெடுந்தொடராக ஒளிபரப்பாகி டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்து வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் இருந்து அதிகமாக நெகட்டிவ் கருத்துக்களாலே வைரலானது. இந்த சீரியலுக்கு ரசிகர்களை விடவும் அதிகமாக நெகட்டிவர்ஸ் இருந்து வருகின்றனர். எப்போது இந்த சீரியல் முடிவடையும் என்று பல வருடங்களாக ரசிகர்கள் கேள்வி கேட்டு வரும் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்த டி என் ஏ டெஸ்ட் இப்போதுதான் பாரதி எடுத்திருக்கிறார். பாரதியின் குழந்தைகள் தான் ஹேமா மற்றும் லட்சுமி என்பது உறுதியான நிலையில் மீண்டும் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கண்ணம்மாவுக்கு கிடைக்கும் ஆதரவு
கடைசி நேரத்தில் கண்ணம்மா இனி எனக்கு பாரதி வேண்டாம் என்று மீண்டும் பாரதியை விட்டு விலகி சென்று விட வேண்டும் என என்னை யாரும் தேட வேண்டாம் என கடிதத்தை வீட்டில் எழுதி வைத்துவிட்டு தன்னுடைய அப்பாவோடு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பி விட்டார். சொந்த ஊரில் ஊர்காரர்கள் கண்ணம்மாவுக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் பாரதி இனி இங்கே வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் கூறி இருக்கின்றனர்.

இப்போதைக்கு வாய்ப்பில்லை
நம்ம ஊரு பொண்ணை 10 வருடமாக நடத்தையில் சந்தேகப்பட்டு ஒருவன் ஒதுக்கி வைத்து விட்டார் என்பதால் இனி நாம் யார் என்று காட்ட வேண்டும் என்று மொத்த குடும்பமும் ஊரும் கண்ணம்மாவுக்கு ஆதரவாக அதே நேரத்தில் பாரதிக்கு எதிராக இருக்கிறது.இந்த நேரத்தில் கண்ணம்மாவை தேடி பாரதியும் அழைந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே டிஎன்ஏ டெஸ்ட் வெளியானதும் சீரியல் முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது முடிவடையவில்லை. இந்த நிலையில் இப்போது கண்ணம்மாவை தேடி பிடித்து விட்டால் சீரியல் முடிவடைந்து விடும் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர் ஆனால் இப்போது அதுவும் நடக்கப்போவதில்லை என தெரிந்திருக்கிறது.

கண்ணம்மா வெளியிட்ட பதிவு
பாரதி, கண்ணம்மா இருக்கும் ஊருக்கு வந்தாலும் கூட ஊர்காரர்கள் அவரை ஏற்றுக் கொள்ள விடாமல் செய்து கொண்டிருப்பதால் இன்னும் பல மாதங்கள் இந்த சீரியல் இதே நிலையில் இழுத்துக் கொண்டே இருக்கப் போகிறது. இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்குப் பிறகு நேற்றைய எபிசோடில் வெண்பா வந்திருந்தார். அதில் கண்ணம்மாவின் புகைப்படத்தை ஜெயிலுக்குள் சுவற்றில் வரைந்து வைத்துக்கொண்டு கண்ணம்மா என கத்திக் கொண்டிருக்கிறார். அதே புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வைத்து கண்ணமாவாக நடிக்கும் வினுஷா கண்ணம்மா கம்மிங் என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் அப்போ இந்த சீரியல் முடிவடையவே போவதில்லை. நீங்கள் ஒரு உறுதியாகத் தான் இருக்கிறீர்கள் என்று விரக்தியோடு கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications