
கடைசியில் ரசிகர்கள் சொன்னதே பாரதி கண்ணம்மாவில் நடந்து விட்டது..நெட்டிசன்களை பீல் பண்ண வச்சிட்டாங்களே
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியல் முதல் பாகம் என்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த கதைக்களம் கடைசியில் வந்து விட்டது.
நான்கு வருடமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தாலும் அதன் கடைசி முடிவுதான் ரசிகர்கள் சொன்னதை அப்படியே காப்பி அடித்திருக்கிறார்கள்.
வெண்பாவுக்கு எதிராக உண்மைகளை கூறிய துர்கா.. மொத்த உண்மைகளும் அவிழ்ந்த தருணம்... சூப்பரான முடிவு

ரசிகர்களால் கலாய்க்கப்படும் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ஆரம்பம் முதலே நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு முன்னணிக்கு வந்த சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியல் நான்கு வருடமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எத்தனையோ பேர் மாற்றம் அடைந்திருக்கின்றனர். குறிப்பாக கதாநாயகியாக நடித்த கண்ணமாவே சீரியலுக்கு டாட்டா காட்டி விட்டு கிளம்பிவிட்டார். காரணம் அவர் மறைமுகமாக கூறி இருந்தாலும் சீரியலின் கதை தான் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டனர். கதை சவ்வு போல இழுத்துக் கொண்டிருக்கிறது என்று நெட்டிசன்கள் தினமும் இந்த சீரியலை கலாய்த்து கொண்டிருந்தனர்.

கண்ணம்மாவின் பேக்கை மறக்க முடியாது
நெட்டிசன்களுக்கு அதிகமாக பிடித்த சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மாவாக தான் இருக்க முடியும். ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் ட்ரோல்ஸ்கள் மீம்ஸ்களால் அதிகமாக வைரலாகி வந்தது. அதுவும் கண்ணம்மா பேக்கை தூக்கிக் கொண்டு நடந்த சீனை யாராலும் மறக்கவே முடியாது. அந்த நேரத்தில் கண்ணம்மாவாக ரோஸ்னி ஹரிப்பிரியா நடித்திருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார். எந்த கண்ணம்மா வந்தாலும் நாங்கள் விட மாட்டோம் என்று நெட்டிசன்கள் இருவரையுமே கலாய்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த நிலையில் பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்த சீரியலில் கதாநாயகன் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துவிட்டார். தற்போது அதற்கான முடிவும் தெரிய வந்து தன்னுடைய குழந்தைகள்தான் லட்சுமி, ஹேமா என்பதை புரிந்து விட்டார்.

முடிவுக்கு வந்த டிஎன்ஏ பிரச்சனை
ஏற்கனவே ஆரம்பத்தில் இருந்தே டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அதில் கண்ணம்மா குற்றம் இல்லாதவர் என்னுடைய குழந்தைகள் தான் ஹேமாவும் லட்சுமியும் என்பது தெரிந்து விட்டால் நான் கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவரை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறிக் கொண்டே இருந்தார். தற்போது அந்த தருணம் வந்துவிட்டது. ஆனால் இனி கண்ணம்மா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் கடைசியாக இருக்கப் போகிறது. இதுவரைக்கும் பாரதிக்கு கூடவே இருந்து துரோகம் செய்து கொண்டு இருந்த வெண்பாவின் மொத்த சூழ்ச்சிகளும் இன்று குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது.

தெரிய வந்த உண்மைகள்
பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் மாற்றி வைத்தது, கண்ணம்மாவை பலமுறை கொலை செய்ய முயற்சி செய்தது என ஒவ்வொரு உண்மையாக குறிப்பாக இதுவரைக்கும் பாரதி தனக்கு குழந்தை பிறக்காது என்று இரண்டு முறை டெஸ்ட் எடுக்கும் போதும் பாரதியை நம்ப வைத்தது என ஒவ்வொரு உண்மையாக தெரிந்து விட்டது. இதை தெரிந்து கொண்ட பாரதி வெண்பாவை எதற்காக என் கூடவே இருந்து என்னுடைய வாழ்க்கையை சீரழிச்ச என்னுடைய உயிர்த்தோழியாக உன்னை நினைத்து இருந்தேன் ஆனால் நீ இப்படி பண்ணி இருக்கியா? என்று இன்றைய எபிசோட்டில் வெண்பாவை அடிக்க பாய, வெண்பா சிரித்துக் கொண்டே இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மொத்த உண்மையையும் பாரதிக்கு தெரியும் போது வெண்பா பைத்தியம் ஆனது போல நடிப்பார். இதுதான் நடக்கும் என்று பலரும் கூறி வந்தது போல இப்போது கதை வந்திருக்கிறது.

இரண்டு உண்மைகள் தெரிய வேண்டுமே
ஆனாலும் இன்னும் பாரதியின் காதலியான ஹேமாவை கொலை செய்தது. அதுபோல பாரதியின் குழந்தையான ஹேமாவை கடத்தியது என்ற குற்றத்தை வெண்பா ஒப்புக்கொண்டதும் முழுசாக மனநிலை சரியில்லாதவர் போல மாற இருக்கிறாராம். கடைசியில் இந்த சீரியலில் முடிவில் வெண்பாவிற்கு மனநிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது என்று முடிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் அப்போ சொன்னதை இப்போ சீரியல் அணியினர் நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியல் இனி முடிக்கப்பட்டதும் இதை கலாய்க்க முடியாதே என்று நெட்டிசன்கள் கூட ஃபீல் பண்ணி வருகிறார்கள்.