Web Series: ஷை பாய்ஸ் காதலில் விழுந்தால்... வெப்சீரீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: being thamizhan என்கிற யூடியூப் சானல், வெப்சீரிஸ்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியான ஷை பாய்ஸ் காதலில் விழுந்தால் என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்தும் கதை. செம காமெடியா இருக்கிறது. கலகலப்பாக போகிறது.

குக்கு வித் கோமாளியில் பங்கேற்ற நகைச்சுவையாளர் பிஜிலி ரமேஷ் இதில் தெரிந்த முகம். நாயகியின் தந்தையாக நடித்து இருக்கார். மற்றபடி எல்லாரும் அறியாத புது முகங்கள்.

when shy boy falls in love என்பதுதான் அந்த வெப் சீரீஸின் டைட்டில். காதலில் விழுந்து கல்யாணம் ஆகியும் இதே ஷையுடன் நாயகன் இருப்பது... நாயகி இதை மாற்ற போராடுவது என்கிற ஒரு சின்ன நாட்தான் கதை.

ஷை பாயுடன் காதல்

ஷை பாயுடன் காதல்

ஷை பாயை காதலித்து, கல்யாணமும் செய்துகொண்டாகி விட்டது. இப்போது போய் அவனை நல்லா பேசுடா.. ஏண்டா பேச மாட்டேங்கறேன்னு சொன்னா எப்படி? அப்படித்தான் இந்த கதை. 3 வது எபிசோடில் இதற்கான விடையை சொல்லிவிடுகிறார்கள். மிகச் சுருக்கமாக முடிந்து போகிறது எபிசோட்.

ஐபிஎல் தமிழ் வெப்சீரீஸ்

ஐபிஎல் தமிழ் வெப்சீரீஸ்

உண்மையில் இந்த வெப்சீரீஸின் மெயின் டைட்டில் ஐபிஎல் தமிழ் வெப்சீரீஸ் என்பதுதான். ஒவ்வொரு எபிசோடுக்கும் இவர்கள் வைக்கும் சப்டைட்டில் வேறு வேறாக இருக்கிறது. அதன்படி ஷை பாய்ஸ் காதலில் விழுந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு எபிசோடில் காண்பித்து இருக்கிறார்கள்.

சாப்பாட்டில் உப்பு

சாப்பாட்டில் உப்பு

ஷை பாயை காதலித்து கல்யாணம் செய்துக்கொண்ட காதலி, அவனை பேசு பேசு என்று சொல்கிறாள். அவன் பேசாமல் ஷையாகவே இருக்க. அவனை பேச வைக்கும் முயற்சிகள் கொஞ்சம் கடுமையாக இருக்கின்றன. சாப்பாட்டில் அதிக உப்பை கொட்டி சாப்பிடு என்று சொல்வது.. முட்டையை அவனுக்கு தராமல் சாப்பிட்டால் அவன் கேட்பான் என்று பார்த்தால் அப்போதும் கேட்கவில்லை.

கோவம் வந்துருது

கோவம் வந்துருது

கடைசியா கோவம் வந்துருது நாயகனுக்கு. போனை வச்சுக்கிட்டு நொய்யி நொய்யின்னு புலம்பறா பொண்டாட்டி. இந்த ஓட்டை போனை எதாவது பண்ணுங்க எதாவது பண்ணுங்க என்று பொண்டாட்டி நச்சரிக்க, குடுன்னு போனை வாங்கி போட்டு உடைச்சுட்டு.. இப்போ யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு சொல்லிட்டு போயிட்டான்.

சொல்லிவைங்க அத்தை

சொல்லிவைங்க அத்தை

ஒரு நாள் அத்தையிடம் போயி.. பாருங்க அத்தை நான் இப்படி இருக்கும்போதுதான் உங்க பொண்ணு என்னை காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டு. இப்போ பேசு பேசுன்னா நான் எதை பேச முடியும். என் சுபாவமே அதுதான்.. அதை எப்படி என்னால் மாத்திக்க முடியும். உங்க பொண்ணுகிட்ட நான் நல்லா பேசினா அது இயல்பா இருக்காது. நான் நடிக்கறேன்னு அர்த்தம்..பொண்டாட்டிகிட்டே நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லேன்னு சொல்லிட்டு போறான். இந்த பேச்சை கேட்டு மனைவி இன்னும் காதலில் விழுந்துட..ஷை பாய் காதலில் விழுந்தால் இதுதான் நடக்கும்னு சொல்றாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+