நம்ப முடியாத தோற்றத்தில் பாவனியுடன் சன் டிவி சீரியலில் நடித்துள்ள விக்ரமன்..எந்த சீரியலில் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் விக்ரமன் ஆரம்ப காலத்தில் சன் டிவியில் நடித்த சீரியல் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
சீரியலில் நடிக்கும் போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் பார்த்து ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அவரா இவர் என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இவரும் விஜய் டிவி பிரபலம்தான்
விஜய் டிவியில் ஹீரோவாக நடித்து தற்போது பிக் பாஸ் போட்டியாளராக களம் இறங்கி இருக்கும் விக்ரமன் குறித்து பலரும் அறியாத விஷயங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. விக்ரமன் ஒரு ஒரு ஜர்னலிஸ்ட் என்பது பலருக்கும் தெரியும் ஆனால் ஒரு நடிகராக இரண்டு சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது தற்போது தான் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விஜய் டிவி பிரபலங்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் தருவார்கள் அந்த வகையில் விக்ரமனும் விஜய் டிவி பிரபலம் தான் என்ற தகவல் தற்போது தான் வெளியாகி இருக்கிறது.

முதல் சீரியல் எதிர்பாராத முடிவு
திருநெல்வேலியை சொந்த ஊராகக் கொண்ட விக்ரமன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் மூலமாக கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். முதல் சீரியலில் சுந்தர் கே விஜயன் இயக்கி இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் நடிகர் சரத்குமாரின் நிறுவனமான ரேடன் நிறுவனம் இந்த சீரியலை தயாரித்திருந்தது. விண்ணைத்தாண்டி வருவாயா சீரியல் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் விக்ரமனுடன் மதுமிதா நடித்திருந்தார். ஆரம்பத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்த சீரியல் வெறும் 29 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது. சீரியல் டிஆர்பி குறைந்து விட்டதால் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பக்கா அரசியல்வாதி
இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் பலமுறை இவரை ஒரு அரசியல்வாதி என்று ஆரம்பத்தில் அடிக்கடி அழைத்து வந்தார் .அதுபோல இவருடைய நேர்மையை பாராட்டும் போதும் கமல் கூட அரசியல்வாதி இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் .பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் விக்ரமன் சன் டிவியில் EMI தவணை முறை வாழ்க்கை என்ற தொடரில் நடித்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பாவனியோடு நடித்த சீரியல்
தவணை முறை வாழ்க்கை என்ற சீரியல் 2016 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த சீரியல் 104 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கிறது. விக்ரமன் நடித்த இரண்டாவது சீரியல் ஆன இதுவும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் டிஆர்பி குறைவாக இருக்கிறது என்று பாதியிலே நிறுத்தப்பட்டது. இந்த சீரியலில் பிக் பாஸ் பாவனியும் நடித்திருப்பார். என்னதான் விக்ரம் நடித்த சீரியல்கள் அந்த அளவிற்கு எடுபடாமல் போனாலும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாக்க தொடங்கிவிட்டனர். ஆரம்பத்தில் இருந்து இவருடைய தனித்துவமான கேரக்டரை ரசிக்கும் ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து ஒவ்வொரு வாரமும் ஓட்டளித்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நெட்டிசன்கள் இவரை எப்போதும் போல திட்டி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications