டிஆர்பிக்காக பாக்கியலட்சுமி சீரியலில் தில்லாலங்கடி வேலை!அசீமை சீரியலுக்குள் கொண்டு வந்திருக்காங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் அசீம் வந்திருக்கிறார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அசீமை பாக்கியலட்சுமி சீரியலில் கொண்டுவந்து அவருக்கு ஆதரவு அதிகரிக்கங்களா? அல்லது பாக்கியலட்சுமி சீரியலுக்கு டிஆர்பி ஏத்துறாங்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

பெண்களை கவர்ந்த சீரியல்
விஜய் டிவியில் ரசிகர்களால் அதிகமாக கவரப்படும் ஒரு சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி செய்யும் லூட்டிகள் ஒரு புறம் என்றால் பாக்கியலட்சுமி எப்போதுமே தன்னுடைய தன்னம்பிக்கையை விடாமல் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெறுவது பெண்களுக்கு அதிகமாகவே பிடித்து இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது.

ராதிகாவுக்கு பெருகும் ஆதரவு
தற்போது பாக்கியலட்சுமியின் வீட்டில் இருந்து இனியாவும் கோபியோடு சேர்ந்து இருக்கிறார். ஆனால் கோபியை எப்படியாவது ராதிகாவிடமிருந்து பிரித்து கொண்டு வந்து தன்னுடைய வீட்டில் மீண்டும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இனியா முடிவெடுத்துருக்கும் நிலையில் ராதிகா இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு என்ன செய்யப் போகிறார் என்று ஒரு சிலர் ராதிகாவிற்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர் .இதுவரைக்கும் கோபி ராதிகாவிடம் பாக்யாவை பற்றி பல தவறான செய்திகளை கூறியிருந்தாலும் இப்போது யார் மீது தவறு என்பதை ராதிகா புதிய தொடங்கி இருக்கிறார்.

பாக்கியாவின் முடிவு
இதே நேரத்தில் பாக்கியா கோபியை விவாகரத்து செய்ததால் அவரைப் பற்றி பல வதந்திகள் பக்கத்தில் இருப்பவர்களிடம் பரவி இருக்கிறது. பாக்யா பணம் வாங்கிக் கொண்டுதான் கோபியை விவாகரத்து செய்தார் என்று இன்று காதுபடவே ஒரு சிலர் பாக்யாவிடம் கேட்கின்றனர். அது மட்டும் இல்லாமல் பாக்யா புதியதாக ஏரியா கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதை குறித்து கோபி மற்றும் பழைய கவுன்சிலர் பாக்யாவை கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இதனால் இனி பாக்யா என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இப்ப வரைக்கும் நான் எலக்ஷனில் நிற்கவில்லை என்றுதான் பாக்கியா கூறிக் கொண்டிருக்கிறார்.

அசீம் திடீர் என்ட்ரி
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி, ஜெனி, செல்வி மூவரும் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே அசீம் நடித்த பகல் நிலவு, சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அசீமுக்கு இப்போது ரசிகர்கள் வட்டாரம் அதிகமாக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய சீரியலை பாக்கியலட்சுமி சீரியலுக்குள் புகுத்தி இருப்பதால், இது யாருக்கு ஆதரவாக செய்யும் செயல் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ஒரு பக்கம் அசீமை வெற்றி பெற செய்வதற்காகத்தான் விஜய் டிவி இப்படி ஒரு பிளான் பண்ணுகிறதா? என்று கேள்வி வருகிறது. இன்னொரு பக்கம் பாக்கியலட்சுமி சீரியலில் அசீம் ரசிகர்களை கவர்வதற்காக இப்படி ஒரு ஏற்பாடா என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications