டாப் குக்கு டூப் குக்கு டைட்டிலை வெற்றி பெற்ற இருவர்.. பரிசு இத்தனை லட்சங்களா? வெளியான தகவல்
சென்னை: சன் டிவியில் 2024 மே 19-ல் இருந்து டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான கிராண்ட் பினாலே இன்று செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் பெப்சி விஜயன் மற்றும் மூன்றாவது இடத்தில் கயல் சைத்ரா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார்
இவர் ஏற்கனவே விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்தவர்தான். அதனால் சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் பரீட்சையமானவர். அதுபோல பல சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார். இவர் விஜய் டிவியை விட்டு சன் டிவியில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார்.

அவரோடு பெப்சி விஜயன், சாய் தீனா, சோனியா அகர்வால், சுஜாதா சிவக்குமார், சிங்கம் புலி, ஐஸ்வர்யா தத்தா, ஷாலினி நிவாஸ், நரேந்திர பிரசாத், சைத்ரா ரெட்டி, சுபாஷ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டூப் குக்காக ஜீவா, அதிர்ச்சி அருண், பாரத், தீனா, மோனிஷா, ஜிபி முத்து, விஜய் முகுந்த், சௌந்தர்யா, கதிர் உட்பட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மூன்று அணியாக பிரிக்கப்பட்டு மூன்று செஃப் வழிநடத்தி வருகிறார்கள். அதுபோல மூன்று செஃப்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று டாப் குக்குகளை வைத்து சமைப்பார்கள். நிகழ்ச்சியில் டாப் குக்குகள் எலிமினேஷன் ஆகி வெளியேறும் போது அவர்களுக்கு பயிற்சி கொடுத்த செஃப்களும் எலிமினேஷன் செய்யப்படுவார்கள். இந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் காப்பி என்று பலரும் கூறி வரலாம்.

ஆனால் அந்த நிகழ்ச்சியை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான மீடியா மெஷன்ஸ் நிறுவனம் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னருக்கு 20 லட்சம் பரிசு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிரபலபடுத்த வேண்டும் என்பதற்காக நடிகர் வடிவேலு ஆரம்பத்தில் இதில் ஒரு சில எபிசோடுகளில் கலந்து கொண்டார்.

அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் தங்களுடைய சினிமா பிரமோஷனுக்காக வருவது போலவே இந்த நிகழ்ச்சியிலும் பல திரைப்பட பிரபலங்கள் ப்ரமோஷனுக்காக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களுக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டி ஆரம்பமானது அதில் சைத்ரா ரெட்டி, சுஜாதா சிவகுமார், பெப்சி விஜயன், நரேந்திர பிரசாத், மானஷா, சுபாஷ் இவர்கள் ஆறு பேரும் பைனலுக்கு செலக்ட் ஆகி இருந்தனர்.

இவர்களுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றது. அதில் முதல் கட்ட முடிவுகளில் சுஜாதா முதலிடத்திலும் சைத்ரா இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். அடுத்து இரண்டாவது கட்டத்தில் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டிகள் 2 மணி நேரம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதைத்தொடர்ந்து சில மணி நேரங்கள் கழித்து நிகழ்ச்சிக்கான முடிவை நடுவர்கள் அறிவித்தனர்.
அப்போது சிறப்பாக சமைத்ததாக நரேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா இருவரும் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு 20 லட்சம் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பெப்சி விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மூன்றாவது இடத்தில் கயல் சைத்ரா வெற்றி பெற்றிருக்கிறார். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications