கேப்டன் ஆன பிறகும் அமுதவாணனை ஏமாற்றிய பிக் பாஸ்..இந்த வாரம் 3 பேரில் வெளியே செல்பவர்?கசிந்த தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 11வது வாரத்தில் அமுதவாணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

11வது வாரத்தில் எட்டு போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் கடைசி இடத்தில் மூன்று போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகி இருக்கிறது.

11வது வார தலைவர்

11வது வார தலைவர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய தற்போது 79வது நாளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ரசிகர்கள் அதிகமாக எதிர்பாத்த ப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை காரணமாக நிகழ்ச்சியில் சுவாரசியம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத பல சுவாரசியமான நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் இந்த வாரம் தலைவர் பதவியில் அமுதவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் நாமினேஷன் லிஸ்டில் வந்திருக்கிறார்.

இதுவரை இல்லாத மாற்றம்

இதுவரை இல்லாத மாற்றம்

இதுவரைக்கும் நாமினேஷனில் வீட்டின் தலைவர்கள் வராத நிலையில் முதல் முறையாக தலைவராக இருக்கும் நிலையில் அமுதவாணன் நாமினேசன் லிஸ்டில் வந்திருக்கிறார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரச்சிதாவின் பெயர் எலிமினேஷன் லிஸ்டில் யாரும் நாமினேஷன் செய்யப்படவில்லை. தற்போது வரை இருக்கும் ஒன்பது போட்டியாளர்களில் எட்டு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்து எலிமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடந்த வாரத்தில் தனலட்சுமி யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியேற்றப்பட்டார்.

எதிர்பார்க்காத வெளியேற்றம்

எதிர்பார்க்காத வெளியேற்றம்

அது மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய வாரத்தில் ஜனனியின் வெளியேற்றமும் யாரும் எதிர்பார்க்காமல் தான் இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் இப்ப வரைக்கும் மணிகண்டன், ஏடிகே, கதிரவன் மூவரும் இருக்கின்றனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பது பலரும் எதிர்பார்க்கும் குழப்பமான கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே மணிகண்டன் மற்றும் ஏடிகே இருவரும் கடைசி இடத்தில் வாக்குகளின் அடிப்படையில் இருக்கும் நேரத்தில் தான் இவர்கள் இருவரில் மாறி மாறி இவர்தான் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியேறிக் கொண்டிருக்கும்போது, சம்பந்தமே இல்லாத ஜனனி வெளியேற்றப்பட்டார்.

மூன்று பேரில் யார்

மூன்று பேரில் யார்

இந்த நிலையில் இந்த வாரம் ஏடிகேக்கு உடல் நிலையிலும் பிரச்சனை இருக்கும் நிலையில் அவர்தான் வெளியேற்றப்படுவதற்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். தனலட்சுமி மற்றும் ஜனனி இருவரும் இந்த ப்ரீஸ் டாஸ்கிலிருந்து அவர்களுடைய குடும்பத்தினர் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டு இருக்கும் நிலையில், ஏடிகேவின் குடும்பத்தையும் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவதற்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+