ஏடிகேவை தொடர்ந்து ஷிவினை கண்டித்த பிக்பாஸ்.. என்ன இப்படி சொல்லிவிட்டார்? அதிகரிக்கும் விவாதங்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்று ஏடிகேவை பிக் பாஸ் கண்டித்து இருந்தார். இனி இதுபோல செய்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவீர்கள் எனக் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் ஷிவின் இடம் பிக் பாஸ் உடையை குறித்து பேசி இருக்கிறார்.
ஷிவினிடம் பிக் பாஸ் உடையை குறித்து பேசியதை குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் பிக் பாஸை ரசிகர்கள் பலர் பூமர் அங்கிள் என கலாய்த்து வருகின்றனர்.

பல விஷயங்கள் தெரிய வந்துள்ளது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத பல மாற்றங்கள் தற்போதைய ஆறாவது சீசனில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு ஒளிபரப்பாகும் சீசன்களில் இரவு நேரத்தில் விஜய் டிவியில் மட்டும்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முடியும். ஆனால் இப்போதைய ஆறாவது சீசன் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படுவதால் உள்ளே நடக்கும் அனைத்து விஷயங்களையும் ரசிகர்கள் பார்த்து தெரிந்து விடுகின்றனர். அந்த மாதிரிதான் இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஸ்மோக்கிங் அறை இருப்பது தெரியாமல் இருந்த நிலையில் தற்போது தெரியவந்தது.

ஏடிகேவிற்க்கு வார்னிங்
அதிலும் ஏடிகேவை நேற்று பிக் பாஸ் ஸ்மோக்கிங் ரூமில் அதிகமாக ஸ்மோக் செய்தால் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என்று எச்சரித்து இருந்தார். ஏற்கனவே ஏடிகே உடல்நிலை சரியில்லாத நிலையில் தனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமாக மன அழுத்தம் இருப்பதாகவும் அதனால் தான் அதிகமாக புகை பிடிப்பதாக அவரே கூறி இருந்தார். இந்த வீடியோக்களை ரசிகர்கள் பலர் பகிர்ந்து உள்ளே இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று கருத்து வெளியிட்டு வரும் நிலையில் இன்று ஷிவினுக்கும் பிக் பாஸ் வார்னிங் கொடுத்து இருக்கிறார்.

டிக்கெட் டூ பினாலே டாஸ்க்
தற்போது நடைபெற்று வந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் நேரடியாக நாமினேஷன் இல்லாமல் பைனலுக்கு சென்று விடுவார்கள் என்பதால் போட்டியாளர்களும் தங்களுடைய முழு திறமையையும் இந்த விளையாட்டில் காட்டியிருந்தனர். ஆனால் கடைசியாக அமுதவாணன் இந்த டிக்கெட்டை ஜெயித்து கடைசி வாரத்திற்கு செல்லும் முதல் போட்டியாளராக தேர்வாகி இருக்கிறார். இந்த டாஸ்கில்தான் பிக் பாஸ் ஷிவினுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

ஷிவினிற்க்கு அறிவுரை
நேற்று நடந்த டாஸ்கில் கயிற்றில் பண்ணை கட்டி அதை கைகளை உபயோகிக்காமல் கால்களை பயன்படுத்தி உண்ண வேண்டும் என்பது போட்டியின் விதிமுறை. இந்த நிலையில் அந்த டாஸ்க் அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கும்போது ஷிவின் சிவப்பு நிறத்தில் ஃபார்மல் டிரஸ் அணிந்திருந்தார். இதனால் பிக் பாஸ் ஷிவினிடம் டாஸ்க் தொடங்குவதற்கு முன்பு வேறு உடை மாற்ற வேண்டும் என்றால் இப்போதே மாற்றி விடுங்கள் என்று கூறினார். அதற்கு ரிஷிவின் பேண்ட் போட வேண்டுமா? என்று சக போட்டியாளர்களிடம் கேட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது twitter பக்கத்தில் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் பூமரா
பிக் பாஸ்க்கு எதிராக ரசிகர்கள் அப்போ பிக் பாஸ் கூட ஒரு பிற்போக்கு ஆண் தானாக செயல்படுகிறாரா? பூமர் செலக்டிங் நியாயஸ்தர் தானா? அக்காவின் மேல் ஆதிக்கத்தை கூறி வைக்காத பிக் பாஸ் என்று ஷிவினுக்காக ரசிகர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலர் அது காலால் பண்ணை உண்ணும் டாஸ்க் அதில் பேண்ட் போடாமல் சென்றால் சரியாக இருக்காது என்பதால் பிக் பாஸ் உடையை மாற்ற சொன்னார் என்று பிக் பாஸ்க்கு ஆதரவாக ரசிகர்கள் சிலர் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications