அசல் கோலாரை அவமானப்படுத்திய பிக் பாஸ்!? இப்படி ஒரு செயலை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க!!
சென்னை: பிக் பாஸ் சீசன் சிக்ஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பற்றி ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அசல் கோலாருக்கு அந்த நிகழ்ச்சியில் நடந்த செயல் குறித்து நெட்டிசன்கள்
கலாய்த்து வருகின்றனர்.
வாக்குகளின் அடிப்படையில் அசல் கோலார் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தாலும் அவர் உள்ளே செய்த செயல்கள் ரசிகர்கள் பலரும் முகம் சுளிக்க வைத்த நிலையில், அவர் வெளியே செல்லும்போது பிக் பாஸ் செய்த செயல் பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.

எதிர்பார்ப்பை நிறைவேற்றாத போட்டியாளர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்று விடுகின்றன. ஒரு சில நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத செயல்களும் நடந்து விடுகின்றது. அந்த மாதிரி தான் தற்போதைய ஆறாவது சீசனில் ஒரு கானா பாடகராக அறிமுகமான அசல் கோலார் ரசிகர்களின் மத்தியில் அவருடைய பாடலையும், அவருடைய கேரக்டரையும் அதிகமாக வெளிக்காட்டுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவர் உள்ளே செய்து வந்த செயல் பலருடைய முகசுளிப்பையும் அதிர்ச்சியும் பெற்றிருந்தது.

அசல் செய்த செயலை கண்டித்த ரசிகர்கள்
திரைப்படங்களில் தன்னுடைய திறமையின் மூலமாக சிறு வயதிலேயே பல பாடல்களை எழுதி வெற்றி பெற்ற அசல் கோலார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சக பெண் போட்டியாளர்களிடம் இவர் சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்ததாக பல நேரங்களில் வீடியோக்கள் வெளியாகி வந்தது .பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் இருக்கும்போது 24 மணி நேர எபிசோடில் இவர் அதிகமாக பெண் போட்டியாளர்களுடன் செலவிட்டு கொண்டிருந்தார் .அது மட்டுமல்லாமல் பெண் போட்டியாளர்களிடம் எப்போதும் கை, கால், முதுகு என அடிக்கடி தடவிக் கொண்டும் கடித்துக் கொண்டும் இவர் இருந்ததை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் கலாய்த்து கண்டித்து வந்தனர்.

நம்பிக்கை பொய் ஆகிவிட்டது
கடந்த வார எலிமினேஷன் லிஸ்டில் இருந்த அசல் கோலாருக்கு குறைவான ஓட்டுகள் கிடைத்து வந்தது. இதனால் இவர்தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். இந்த நிலையில் கமல், அசல் கோலார் நீங்கள் வெளியே செல்வீர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு இல்லை நான் இங்கே வந்து நிறைய வேலை செய்து கொண்டிருக்கிறேன். அதை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் என்னை எப்படியும் வெளியேற்ற மாட்டார்கள் என்று உறுதியாக கூறி வந்தார். அது மட்டுமல்லாமல் அவரோடு அடிக்கடி ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்த நிவாவும் அசல் வெளியே செல்ல மாட்டார், செல்லக்கூடாது என்று உறுதியாக கூறி வந்தார். ஆனால் அவர்களுடைய நம்பிக்கைக்கு எதிர்மறையாக அசல் எலிமினேஷன் செய்யப்பட்டார்.

கடுப்பான பிக் பாஸ் கொடுத்த தண்டனை
அசல் வெளியே வந்து கமல் முன்னிலையில் பேசிக்கொண்டு அப்படியே வெளியேற்றப்பட்டார். எல்லா சீசன்களிலும், எல்லா போட்டியாளர்களும் வெளியே செல்லும்போது கமல் முன்னிலையில் உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டு தான் வெளியே செல்வார்கள். ஆனால் அசலுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கொடுக்கவில்லை. அவருடைய கடந்து வந்த பயண வீடியோவை பிளே செய்ததும், அதில் இவர் செய்த சில்மிஷங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனால் அதைத் தொடர்ந்து உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் பேசலாம் என்று எதிர்பார்த்து இருந்த அசலுக்கு ஏமாற்றத்தை கொடுத்து ,அப்படியே வெளியேற்றி விட்டார்கள். இது அசல் செய்து வந்த செயலால் பிக் பாஸ் அவர் மீது எவ்வளவு கடுப்பாகி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications