இடுப்பில் கைவைத்து திரும்பிய சனம் ஷெட்டி.. மூச்சடைத்துப் போன ரசிகர்கள்!
சென்னை: திரையில் யார் வேண்டுமானாலும் ஹீரோயினாக இருக்கலாம்.. ஆனால் உங்க வாழ்க்கையில் நீங்கதாங்க ஹீரோயின் என்று சூப்பராக ஒரு தத்துவத்தை உதிர்த்திருக்கின்றார் சனம் ஷெட்டி.
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சில்லென்று காற்றை சுவாசித்தபடி இவரைப் பார்த்த ரசிகர்கள் காற்று வாங்க நாங்களும் வரலாமா என அப்ளிகேஷன் போட்டு வருகின்றனர்.
நெற்றியில் பெரிய பொட்டோடு , புடவையில் கம்பீரமாக வந்த சனத்தைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் இவருடைய இந்த க்யூட் அழகை வர்ணிக்க தவறவில்லை.

உண்மையில் பேரழகிதான்
அழகு என்பது பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கும் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வேற லெவலில் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இவர் இதற்கு முன்பு எத்தனையோ விதமான மாடல் போட்டோஷூட் எடுத்திருந்தாலும் புடவையில் எடுத்த போட்டோக்களை பார்த்ததும் புல்லரித்துப் போன ரசிகர்கள் அழகுக்காக நீங்கள் மெனக்கெட தேவையே இல்லை. சும்மாவே நீங்க பேரழகிதான் என்று வண்டி வண்டியாக வர்ணித்து வருகின்றனர்.

கெத்து மட்டும் மாறலையே
சனம் ஒரு மாடலாக இருந்தாலும் இப்போ ரசிகர்களின் மனதில் கம்பீரமான கெத்தான கேரக்டராக தான் வலம் வந்துகண்டிருக்கிறார். முன்பு மாடலாக மட்டுமே ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் இவருடைய சுயரூபத்தையும், கேரக்டரையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தாலும் ஒரு சிலர் மட்டும்தான் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தில் வலம் வருகின்றனர். அதில் சனம் ஷெட்டியின் ஒருவர். அதிகமான புகழ்ச்சியை கண்டுகொள்ளாத இவர் தன்னைப்பற்றி நெகட்டிவாக பேசுபவர்களையும் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் அவர் அவராகவே இருக்கிறார் போல.

துவண்டு போகாத சனம்
தனக்கு தப்புன்னு பட்டா அதை டக்குனு கேள்வி கேட்பதில் இவருக்கு நிகர் இவர்தான். அதனால் தான் இவர் கொஞ்சம் தனித்துவமாகவும் இருக்கிறார். சிலர் செய்வது தப்பு என்று தெரிந்தும் அவர்கள் நமக்கு முக்கியமானவர்கள் என்று யாருக்கும் சிங்கி அடிப்பது இல்லை. துணிந்து நிறை குறைகளை சுட்டிக் காட்டுவதில் இவர் எப்போதுமே கெத்து தான். அதுமட்டுமல்லாமல் தன்னுடன் இருப்பவர்களாக இருந்தாலும் சரி தனக்கு ரொம்பவே பிடித்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் செய்வது தப்பு என்று தெரிந்தால் உடனே முகத்துக்கு நேராக பேசி விடுகிறார். இதைப் பார்த்துதான் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

டிரண்ட் ஆன ஹேஸ்டேக்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இவர் ஒரு பெரிய கோபக்காரர் என்றும் இவருக்கும் இவருடைய காதலனுக்கும் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் இவராகத்தான் இருக்கும் என்றும் பலர் கூறிவந்தனர். ஏன் ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில பிரச்சினைகளின் போது கூட இதே வார்த்தைகளை தான் பலர் கமென்ட்களில் பேசி வந்தனர். ஆனால் நாட்கள் போக போக இவருடைய உண்மையான கேரக்டரை தெரிந்து கொண்ட பிறகு தான் யார் மீது தப்பு என்பதை ரசிகர்கள் உணர ஆரம்பித்திருக்கின்றனர். ஆனாலும் அதிகமாக அலட்டிக் கொள்ளாத சனம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புதிய பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இவரை விடவும் இவருடைய ரசிகர்கள் தான் ஆர்வமாக இருக்கின்றனர்.

இப்படி யாருக்கும் அமைந்துவிடுவதில்லை
இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை போன்று வேறு யாருக்கும் அவ்வளவு எளிதில் அமைந்து விடுவதில்லை. அந்த அளவிற்கு இவருக்காக உண்மையான ரசிகர்கள் ஆரம்பித்திருக்கின்றனர். அதனால்தான் இவர் பாதியிலே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார் என்று தெரிந்ததும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து இவருடைய பெயரில் ஹேஸ்டேக் ட்ரண்ட் செய்துவிட்டனர். ஆனாலும் பிக்பாஸ் இவரை வெளியேற்றிவிட்டது. அப்போதுகூட எனக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை. ரசிகர்களின் மனதில் வென்றதே போதும் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

புடவையில் வேற லெவல்
திரைப்பட வாய்ப்பு எதுவும் இப்போதைக்கு இல்லாததால் இவர் அடிக்கடி தன்னுடைய ரசிகர்களின் வேண்டுதலுக்காக இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார். இவருடைய போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் குஷியாக கமெண்ட்ஸ் களை போட்டு வருகின்றனர். அதில் தொடர்ந்து பலர் தினமும் போஸ்ட் போடுங்கள் என்று தான் கேட்டு வருகின்றனர். ரசிகர்களின் அன்பை பார்த்த சனமும் தன்னால் முடிந்தவரைக்கும் போஸ்ட் போட ஆரம்பித்திருக்கிறார். அதுவும் இப்போ புடவையில் இவர் வேற லெவல் வைரலாகி வருகிறார். ஒன்று இரண்டு போட்டோக்களை அல்லாமல் பல போட்டோக்களை ஒரே நேரத்தில் அப்லோடு செய்து இருப்பதை பார்த்ததும் இதில் எது பெஸ்ட் என்று சொல்ல முடியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் தவிக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications