திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டவ் தே புயல்.. கேரளாவில் சாலையில் வேரோடு சாய்ந்த மரம்.. நூலிழையில் உயிர் தப்பிய நபர்- வீடியோ வைரல்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: டவ் தே புயலால் சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்த போது அதிர்ஷ்டவசமாக நூலிழையில் ஒருவர் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் காரணமாக கேரளாவில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிறைய இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது.

கரையை கடக்கும்

கரையை கடக்கும்

டவ் தே புயல் தற்போது அதி தீவிர புயலாக மாறியது. இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள்ளாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் அதி தீவிரமடைந்துள்ளதால் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணனூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பொழிவை தந்துள்ளது.

வெள்ளக்காடு

வெள்ளக்காடு

கேரளாவில் கடற்கரை கிராமங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்ப்ட்டுள்ளன. இந்த புயல் இன்று இரவு கரையை கடந்த பிறகுதான் சரி செய்யும் பணிகள் நடத்தப்படும்.

வைரல்

வைரல்

இந்த நிலையில் சாலையில் நின்றிருந்த ஒருவர் மரம் விழும் போது ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் வர்கலா பகுதியில் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது, எதிர்பாரதவிதமாக பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்துள்ளது.

நூலிழையில் உயிர் தப்பிய மரம்

இதை உடனே கவனித்த அவர் அங்கிருந்து வேகமாக ஓடி நூலிழையில் உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பேர்தான் அதிர்ஷ்டம் என சமூகவலைதளங்களில் கருத்தை பதிவிடுகிறார்கள். அது போல் இதற்கு பேர்தான் நூலிழையில் உயிர் தப்புவது என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.

English summary
A man fortunately escapes when a tree uprooted in Kerala. Video goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X