நடிகைக்கு காருக்குள் நேர்ந்த கொடூரம்! மாஸ்டர் ப்ளானே இவங்கதானா? கசிந்த ஆடியோ வம்பாய் சிக்கிய காவ்யா!
திருவனந்தபுரம் : கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் மிக முக்கிய பங்காற்றி இருப்பதாக அதிர்ச்சி ஆடியோக்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, பிரபல மலையாள நடிகை ஒருவர் பணி முடிந்து திரும்பும் போது கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பதாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு ஒட்டுமொத்த மலையாள திரையுலகிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

நடிகை பாலியல் வழக்கு
இவ்வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பினார் மலையாள இயக்குனரான பாலச்சந்திரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மலையாள இயக்குனரான பாலச்சந்திரன், நடிகையை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகளை குற்றவாளிகள் செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் அந்த காட்சிகளை மலையாள நடிகர் திலிப் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான சிலர் பார்த்ததாக கூறியிருந்தார்.

நடிகர் திலீப்
மேலும் கைப்பற்றப்பட்ட நடிகர் திலிப்பின் செல்போனில், நடிகை தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், திலீப் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்றதையும் ஊர்ஜிதம் செய்வதற்கான ஆதாரம் உள்ளது. கொலைச் சதி வழக்கு தொடர்பாக இயக்குநர் பாலச்சந்திர குமார் சமர்ப்பித்த குரல் குறிப்புகளும் குற்றப் பிரிவில் உள்ளது. திலீப்பின் போனில் நீதிமன்ற ஆவணங்களின் புகைப்படங்களும் சிக்கின.

மேலும் அதிர்ச்சி
இந்நிலையில் இவ்விவகாரத்தில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் செல்போனிலிருந்து குற்றப்பிரிவு போலிசார் ஒரு வாய்ஸ் மெசேஜை மீட்டெடுத்தது. அதில் நடிகைக்கு எதிராக குற்றத்தைத் திட்டமிட்டது காவ்யா தான் என்று தெரிய வந்துள்ளதாக போலிசார் கூறியுள்ளனர். காவ்யா மாஸ்டர் பிளான் போட்ட நிலையில் அவரது கணவர் திலீப்பும் வெகு காலத்திற்கு பிறகு இதனை செயல்படுத்தியுள்ளார்.

காவ்யா மாதவன் திட்டம்
நடிகர் திலீப்பின் சகோதரியின் கணவர் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத் என்பவரும் உரையாடும் 3 செல்போன் ஆடியோக்களில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடிகை காவ்யா மாதவனின் தூண்டுதல் இருப்பது அம்பலமாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக சிறப்பு விசாரணைக் குழுவினர் மூன்று செல்போன் ஆடியோக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் காவ்யா மாதவன் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications