சித்திரை விஷூ: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு... பக்தர்களுக்கு அனுமதி
திருவனந்தபுரம்: சித்திரை விஷூ வழிபாட்டுக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது. ஏப்ரல் 15ல் சித்திரை விஷூ வழிபாடு நடைபெற உள்ளது.
கொரோனா பரவலால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளுன் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விஷூ வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சித்திரை விஷூ வழிபாடு சிறப்பாக நடைபெற உள்ளது.

இன்று நடை திறப்பு
அதன்படி கோவிலில் ஏப்ரல் 15ல் சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து மூலவருக்கு விளக்கேற்றுவார். அதன்பிறகு 18ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். அதன்பிறகு வேறு விசேஷ பூஜைகள் இல்லை. இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சிறப்பு பூஜைகள்
இதையடுத்து நாளை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற உள்ளது. சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரை விஷூ வழிபாடு
ஏப்ரல் 15ல் சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்று காலை கனிகாணும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும், பக்தர்கள் காய், கனி அலங்காரத்தில் அய்யப்பனை தரிசிக்க முடியும். காலை 7 மணி வரை பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் கைநீட்டம் வழங்குவர். ஏப்ரல் 18 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பக்தர்கள் அனுமதி
முன்னதாக சித்தரை விஷூவையொட்டி நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications