திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 நாள் முன் வந்தனர்.. அபுதாபி, துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா.. கேரளாவில் புதிய சிக்கல்!

அபுதாபி மற்றும் துபாயில் இருந்து கேரளாவிற்கு சிறப்பு விமானம் மூலம் வந்த 363 பேரில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: அபுதாபி மற்றும் துபாயில் இருந்து கேரளாவிற்கு சிறப்பு விமானம் மூலம் வந்த 363 பேரில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக உலகம் முழுக்க பல்வேறு வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வரும் முடிவில் மத்திய அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக பெரிய அளவில் வந்தே பாரத் மிஷன் என்ற மீட்பு பணி திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி தொடங்கிய இந்த மீட்பு பணி 13ம் தேதி வரை நடக்க உள்ளது.

Coronavirus: 2 Persons got the infection after returning from Gulf 2 days back to Kerala

மொத்தமாக 19 லட்சம் இந்தியர்களை மீட்க இந்த திட்டம் போடப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக 2 நாட்களுக்கு முன் கேரளாவிற்கு அபுதாபி, துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கி இருந்த இந்தியர்கள் மீட்கப்பட்டு கேரளா கொண்டு வரப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வந்தே பாரத் மிஷன் மூலம் அபுதாபி மற்றும் துபாயில் இருந்து கேரளாவிற்கு சிறப்பு விமானம் மூலம் வந்த 363 பேரில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த இரண்டு பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.

796 கொரோனா நோயாளிகள்.. மருத்துவமனையிலிருந்து திடீரென முகாமிற்கு மாற்றம்.. சென்னையில் என்ன நடக்கிறது?796 கொரோனா நோயாளிகள்.. மருத்துவமனையிலிருந்து திடீரென முகாமிற்கு மாற்றம்.. சென்னையில் என்ன நடக்கிறது?

ஒருவர் கோழிக்கோட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னொருவர் கொச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் வந்த மற்ற பயணிகள் சிலருக்கு சோதனை செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இவர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் என்னிக்கி 505 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அங்கு 484 பேர் குணப்படுத்தப்பட்டுவிட்டனர்.

இதனால் அங்கு ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இதுவரை கேரளாவில் 4 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கேரளாவில் இந்த வாரம் இன்னும் கூடுதலாக 698 பயணிகள் ஐஎன்எஸ் ஜலஷ்வா போர் கப்பல் மூலம் இவர்கள் கொச்சி வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: 2 Persons got the infection after evacuated from Gulf 2 days back to Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X