Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலையலையாய் வரும் கூட்டம்.. சபரிமலையில் 10 மணி நேரம் காத்திருந்து அய்யப்பனை தரிசிக்கும் பக்தர்கள்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவதால், பக்தர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

2022-2023ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம் 27ம் தேதி மண்டல பூஜை நடந்தது.

அதன் பின்னர் அன்றைய இரவே, மீண்டும் நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அலைமோதும் பக்தர்கள்

அலைமோதும் பக்தர்கள்

ஆனால் தமிழ்நாடு, கேரளா மட்டுமல்லாமல் வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் அய்யப்பனை தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருக்கிறது. இதன் காரணமாக சீசனின் பாதியில் தரிசனம் செய்ய கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 மணி நேரம் காத்திருப்பு

10 மணி நேரம் காத்திருப்பு

இருப்பினும் பக்தர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பனை தரிசிக்க தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள். இதற்கிடையே மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வரும் 14ம் தேதி நடைபெறுகிறது.

 அய்யப்பனுக்கு திருவாபரணங்கள்

அய்யப்பனுக்கு திருவாபரணங்கள்

மகர விளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் பத்தனம்திட்டை மாவட்டம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆபரணங்கள் 12ம் தேதி பந்தளம் ராஜ பிரதிநிதியின் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11ம் தேதி எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் நடைபெறும்.

மகர விளக்கு பூஜைகள்

மகர விளக்கு பூஜைகள்

இந்தநிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மகர விளக்கின் முன்னோடியாக 14ம் தேதி திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தலைநகரான திருவனந்தபுரம் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பு நெய் மூலம் அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மகர சங்கரம பூஜை நடைபெறும். முன்னதாக 12, 13 ஆகிய தேதிகளில் சன்னிதானத்தில் இரவு பிரசாத சுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து கலசம், அஸ்திர கலசம் ஆகியவை நடைபெறும்.

14ம் தேதி ஜோதிவடிவில் அய்யப்பன்

14ம் தேதி ஜோதிவடிவில் அய்யப்பன்

அதேபோல் 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் திருவாபரண ஊர்வலத்திற்கு சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பிறகு திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 6.30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் ஜோதிவடிவில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

20ம் தேதியுடன் சீசன் நிறைவு

20ம் தேதியுடன் சீசன் நிறைவு

தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜை, வழிபாடுகளுக்கு பின் 20ம் தேதி காலை 7 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்பட்டு நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவு பெறும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் 12ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+