ஜனநாயகத்தை மரணிக்க செய்கிறார் ஆளுநர்... கேரளாவில் முழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவனந்தபுரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தாமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனநாயகத்தை மரணிக்க செய்பவராக இருக்கிறார் என கேரளாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் மத்திய - மாநில உறவுகள் என்ற தலைப்பில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அவசியம் திருத்தம் செய்திட வேண்டும்.

தேசிய அளவில் வெற்றியடைவதன் மூலமாக மட்டுமே இந்தியாவின் ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும் இறையான்மையையும் பாதுகாக்க முடியும். மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். பினராயி விஜயனும் நானும் தலையாட்டி பொம்மைகளாக இருந்து இருந்தால் நம் ஆட்சிக்கு எந்த நெருக்கடியையும் தந்திருக்க மாட்டார்கள்.
ஜனநாயகத்தை மரணிக்க செய்பவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இரு முறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தாமதித்து தொடர்ந்து இழுத்தடித்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ரவி." என்றார்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 வது ஆண்டு மாநில மாநில மாநாடு நாளை நிறைவடைகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கண்ணூருக்கு சென்றடைந்தார். அவரை விமான நிலையம் சென்று கேரள மாநில அமைச்சர்கள் வரவேற்பு கொடுத்தனர். இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த மார்க்சிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications