போச்சு போங்க.. கேரளா லாட்டரியில் வென்ற ரூ.25 கோடிக்கு வரி, கமிஷன் எவ்வளவு தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்பட்ட திருவோணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடியை கோவையை சேர்ந்த நபர் தட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு வரி, ஏஜென்ட் கமிஷன் போக எவ்வளவு தொகை கையில் கிடைக்கும் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை நடைமுறையில் உள்ளது. கேரளாவில் அரசு சார்பிலும், தனியார் நிறுவனங்கள் சார்பிலும் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலத்தில் விற்பனை செய்யப்படும் லாட்டரிகளுக்கு அதிகளவிலான பரிசுத்தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கேரளா அரசு சார்பில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி முதல் பரிசுத்தொகையாக அறிவித்து திருவோணம் பம்பர் பிஆர் 93 எனும் லாட்டரி விற்பனையை செய்தது.
இதில் ஒரு லாட்டரி ரூ.500 ஆகும். மொத்தம் 75.76 லட்சம் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த லாட்டரி சீட்டை கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் வாங்கினார்கள். இந்த லாட்டரிக்கான ரிசல்ட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று லாட்டரிக்கான ரிசல்ட் வெளியானது.
இதில் முதல் பரிசான ரூ.25 கோடியை தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த நடராஜன் வென்றுள்ளார். அவர் வாங்கிய TE 230662 என்ற லாட்டரிக்கு தான் முதல் பரிசு விழுந்துள்ளது. இந்நிலையில் தான் கேரளா லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு வென்ற கோவையை சேர்ந்த நடராஜனுக்கு வரி பிடித்தம் உள்பட எவ்வளவு தொகை கிடைக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்தியாவில் லாட்டரி உள்பட பிற விளையாட்டுகளில் பரிசுத்தொகையாக ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பெற்றால் அதற்கு வரியாக 31.2 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்பாதைய ரூ.25 கோடி லாட்டரி பரிசுத்தொகைக்கான வரி என்பது 31.2 சதவீதமாக உள்ளது. அதன்படி பார்த்தால் லாட்டரி வரியாக அரசுக்கு ரூ.6.75 கோடி செலுத்த வேண்டி இருக்கும்.
மேலும் ஏஜென்ட் கமிஷன் தொகையாக ரூ.2.5 கோடி செலுத்தப்பட வேண்டும். அதோடு லாட்டரி என்பது தனி நபருக்கான அதிர்ஷ்ட வருவாய் என கருதப்படுவதால் கூடுதல் வரியாக (Surchagre) ரூ.2.49 கோடி பிடித்தம் செய்யப்படும். இதுமட்டுமின்றி செஸ் வரியாக 0.37 கோடி(அதாவது ரூ.39 லட்சம்) இப்படியாக மொத்தம் 12.11 கோடி பிடித்தம் செய்யப்படும். இந்த பிடித்தங்கள் போக மீதம் ரூ.12.89 கோடி மட்டுமே ரூ.25 கோடி வென்ற நபருக்கு கிடைக்கும்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications