பிற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் ஏற்றி செல்ல தமிழக அரசு தடை.. அதிர்ந்த கேரளா! விஜய்க்கு விடி சதீசன் கடிதம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட்டுமான கற்கள் கொண்டு செல்வதற்கு மூன்று மாதங்கள் தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தடையால் கேரள அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இது தொடர்பாக கேரள முதல்வர் விடி சதீசன் தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் ஜல்லி கற்கள் போன்ற கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். தற்போது விஜய்யின் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட்டுமான கற்கள் கொண்டு செல்வதற்கு மூன்று மாதங்கள் தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Kerala CM VD Satheesan writes to Vijay - Tamil Nadu government bans transport of mineral resources to other states

விஜய்க்கு கேரள முதல்வர் கடிதம்

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் கேரள அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- நெருங்கிய அண்டை மாநிலங்களாகவும் கலாசாரம் மற்றும் பண்பாட்டு ஒற்றுமை கொண்ட மாநிலமாக தமிழ்நாடும் கேரளாவும் உள்ளன. இரு மாநிலங்களும் கூட்டாட்சி உணர்வுடன் இணைந்து செயல்பட்டு மக்களின் நலனையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி வருகின்றன.

தமிழக அரசு, பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் ஜல்லி கற்கள், பிற கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல புதிய விதிகளை அறிமுகம் செய்து இருப்பதாக அறிய முடிந்தது. தமிழக அரசின் இந்த உத்தரவால் நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு ஜல்லி கற்கள் கொண்டு செல்லும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் பாதிப்பை ஏற்படுத்தும்

இந்த மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் கற்கள்தான் கேரளாவின் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன. எனவே, தமிழக அரசின் இந்த கட்டுப்பாடு, கட்டுமான பொருட்களுக்கான விநியோக சங்கிலியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக கட்டுமான பணிகள் தடை படுவதோடு, நெடுஞ்சாலை திட்டங்களும் காலதாமதம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+