திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிய சைஸ் வெடி.. திட்டமிட்டு கொன்று உள்ளனர்.. கேரள யானை கொலை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடைபெற்று இருக்கலாம் என்று அம்மாநிலத்தை சேர்ந்த வனவிலங்கு துறையின் தலைமை வார்டன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட யானை... ஷாக் பின்னணி

    கேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு காட்டுப்பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது .

    உணவு தேடி ஊருக்குள் வந்த யானை வெடி வைக்கப்பட்ட அன்னாசியை சாப்பிட்டதில் பலியானது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தீவிரமான விசாரணை நடந்து வருகிறது.

    நொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது?

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கேரளாவின் வனவிலங்கு துறையின் தலைமை வார்டன் சுரேந்தர் குமார் பேட்டி அளித்துள்ளார். அதில், காட்டுக்குள் இருந்த யானை உணவு தேடி ஊருக்குள் வந்து இருக்கிறது. வயிற்றில் குட்டி யானை இருந்ததால் பசியில் ஊருக்குள் வந்துள்ளது. அப்போதுதான் அதற்கு வெடி மருந்து வைக்கப்பட்ட அன்னாசி கொடுக்கப்பட்டுள்ளது . இதில் இருந்த வெடியை யானை கடித்ததும் அது வாயிலேயே வெடித்து உள்ளது.

    திட்டமிட்டு செய்தனர்

    திட்டமிட்டு செய்தனர்

    இந்த செயலை பார்க்க திட்டமிட்டு செய்தது போல தோன்றுகிறது. யானையை கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டு யாரோ அதற்கு அன்னாசியை கொடுத்து இருக்கிறார்கள். இதனால் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதற்காக டாஸ்க் போர்ஸ் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். பொதுவாக வயல்களை காக்க இப்படி அன்னாசி பொறிகளை வைப்பார்கள்.

    சட்டம் என்ன சொல்கிறது

    சட்டம் என்ன சொல்கிறது

    வன விலங்குகள் வயலுக்குள் வந்து செயல் செய்ய கூடாது என்று இப்படி வைப்பார்கள். ஆனால் இதற்கு கேரளாவில் தடை உள்ளது. இது குற்றச்செயல் ஆகும். இதற்கு 7 வருட சிறை தண்டனை வரை வழங்கப்படும். ஆனால் விவசாயிகள் இப்படி செய்ததாக தெரியவில்லை. விவசாயிகள் வைக்கும் வெடிகள் சிறிய வகையை சேர்ந்தது. வெல்லத்தில் சுருட்டி வயலில் வைப்பார்கள். அதை சாப்பிட்டால் யானை சாகாது.

    துயரம்

    துயரம்

    அந்த சின்ன வெடிக்கு யானை இறந்து இருக்காது. இது கொஞ்சம் பெரிய அளவு வெடி. யாரோ யானைக்கு வேண்டும் என்றே இப்படி அன்னாசி கொடுத்து இருக்கிறார்கள். இந்த விஷயம் எனக்கு பெரிய துயரத்தை கொடுக்கிறது. வெடியால் யானையின் வாய் கிழிந்து இருக்கிறது. வெடி வாயில் வெடித்ததில் உட்பக்கம் முழுக்க காயம் ஏற்பட்டுள்ளது. நாக்கு கிழிந்துள்ளது.

    சுரேந்தர் குமார் கருத்து

    சுரேந்தர் குமார் கருத்து

    கடந்த ஏப்ரலில் இதேபோல் கேரளாவில் யானை ஒன்று வெடி வைத்து கொல்லப்பட்டது. அதன் வாயிலும் இதேபோல் வெடிப்பு இருந்தது. இதுதான் மரணத்திற்கு காரணம். இரண்டு மரணமும் ஒரே மாதிரி இருக்கிறது. இதுதான் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. தற்போது அந்த வெடி மருந்தை ஆராய்ச்சி செய்து வருகிறோம். வெடி மருந்தை வாங்கியவரை தேடி வருகிறோம். இதை வைத்த குற்றவாளிகளை பிடிக்க முயன்று வருகிறோம், என்று சுரேந்தர் குமார் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Kerala Elephant murder was pre-planned and intentional says The state Wild Life Warden.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X