மூதாட்டி உடலுடன் சிரித்தபடி போஸ்.. சர்ச்சையில் சிக்கிய கேரள குடும்பம்.. மகன் விளக்கம்
மூதாட்டியின் சடலத்துடன் குடும்பத்தினர் அனைவரும் சிரித்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, அது தொடர்பாக அக்குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.
திருவனந்தபுரம் : கேரளாவில் மூதாட்டியின் சடலத்தைச் சுற்றி நின்று, குடும்பத்தினர் சிரித்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. அதைத் தொடர்ந்து, அக்குடும்பத்தைச் சேர்ந்தோர் அப்புகைப்படம் எந்தமாதிரியான சூழ்நிலையில் எடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
துக்க வீடு என்றாலே அனைவரும் சோகமயமாகத்தான் இருப்பார்கள். ஆனால் திருமண வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மணமக்களோடு, குரூப் போட்டோ எடுத்துக் கொள்வது போல, துக்க வீட்டில் யாராவது புகைப்படம் எடுப்பார்களா? அப்படி ஒரு சம்பவம் நடந்தால், நிச்சயம் அது மற்றவர்களுக்கு பேசுபொருளாகத்தானே இருக்கும். அப்படித்தான் கேரளாவில் நடந்த சம்பவம் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இறந்த மூதாட்டியின் சடலத்தைச் சுற்றி குடும்பத்தினர் அனைவரும் சிரித்தபடி போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் அந்த சர்ச்சைக்குக் காரணம்.

சோகம்
கேரள மாநிலம் மல்லப்பள்ளியில் உள்ள பனவேலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசித்து வந்த 95 வயதான மரியம்மா என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் ஹாலில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்க, அதனைச் சுற்றி அவரது குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.

சர்ச்சை
அப்போது அவர்கள் அனைவரும் சிரித்தபடி ஒன்று சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. சடலத்துடன் எப்படி இவர்கள் இப்படி ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் என இந்தப் புகைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால், அது சர்ச்சையில் சிக்கியது. கண்டனங்களுடன் இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

மகன் விளக்கம்
இந்நிலையில், இந்தப் புகைப்படம் குறித்து உயிரிழந்த மூதாட்டியின் மகனும், கிறிஸ்தவ பாதிரியாருமான ஜார்ஜ் உம்மன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "எங்கள் அம்மா ஒன்பது தசாப்தங்களாக அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர். என்னுடன் பிறந்த 9 பேரில் ஒருவர் இறந்துவிட, மீதி 8பேரும் கடைசி வரை அம்மாவுடனேயே இருந்தோம்.

சுறுசுறுப்பானவர்
94 வயதான போதும் கடைசிகாலம் வரை அம்மா சுறுசுறுப்பாகவே இருந்தார். கடந்த செவ்வாய்கிழமை காலமான அவருக்கு, வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்குகளை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்த வியாழனறு நள்ளிரவில் அம்மாவின் சடலம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கூடி இருந்தோம்.

நினைவுகள் பகிர்வு
மகள், மகன், மருமகள்கள், மருமகன்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் என நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்தோம். அப்போது அம்மா பற்றிய நல்ல நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம். பலர் வேடிக்கையான நினைவுகள் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களைக் கூறினார்கள். ஒருசிலர் கூறியது அழுகையை வரவழைத்தது.

அன்பான பிரியாவிடை
வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை இப்படியான பேச்சு நீடித்தது. அதன் முடிவில் தான் அம்மாவுடன் அந்த கடைசி நாளின் தருணங்களை புகைப்படம் எடுக்க முடிவு செய்தோம். சகல சந்தோசத்துடனும், சௌகரியத்துடனும் வாழ்ந்து மறைந்த எங்கள் தாய்க்கு அது எங்கள் அன்பான பிரியாவிடை. இந்தப் புகைப்படத்தைப் பலரும் பலவிதமாக விமர்சிக்கிறார்கள்.

கவலையில்லை
ஆனால் நாங்கள் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அம்மா எங்களுக்கு யாரென்று தெரியும். அம்மாவுடன் நாங்கள் வைத்திருக்கும் உறவும், வயதான காலத்தில் அம்மாயை நாங்கள் எப்படிக் கவனித்துக் கொண்டோம் என்பதும் எங்கள் குடும்பத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும். எனவே, இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் எதுவும் எங்களைப் பாதிக்காது" என அதில் உருக்கமாக ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினர் மனநிலை
இறந்த மூதாட்டிக்கு மொத்தம் 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள் எனக் கூறப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் அவர்கள், மூதாட்டியின் இறுதிமூச்சின்போது அருகில் இருக்க வந்துள்ளனர். இப்போது அந்த புகைப்படத்தின் முழுப் பின்புலமும் தெரிய வந்த பிறகு, அதனை விமர்சித்து கிண்டல் செய்தவர்களில் பலர், தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications