கடவுள் தேசத்துக்கு வந்த சோதனை! குரங்கு அம்மையை அடுத்து ‘பன்றி காய்ச்சல்’! 300 பன்றிகளை கொல்ல முடிவு?
திருவனந்தபுரம் : கேரளா மாநிலத்தில் கொரோனா, குரங்கு அம்மை பாதிப்புகளால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், அங்குள்ள இரு பண்ணைகளில் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு வளர்க்கப்படும் 300 பன்றிகளை கொல்ல அரசு முடிவெடித்துருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கொரோனாவுக்குப் பிறகு உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது குரங்கு அம்மை பாதிப்பும் சேர்ந்து மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. இந்நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளையும், மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் மற்றொரு சிக்கல் உருவாகியிருக்கிறது.

கேரளா
இந்நிலையில் கேரளாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வளர்ப்பு பன்றிகளை பாதிக்கும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் மிகவும் ஆபத்தான வைரஸ் நோயாக கருதப்படுகிறது. ஜூலை மாத தொடக்கத்தில் பீகார் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்
இதனை அடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் கேரள அரசும் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியது. இருந்த போதும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் கேரளாவுக்கு பகுதி உள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி என்ற ஊரில் உள்ள இரண்டு பன்றிகள் வளர்க்கும் பண்ணைகளை பல பன்றிகள் அடுத்தடுத்து கூட்டமாக இறந்ததாக கூறப்படுகிறது.

சோதனையில் அதிர்ச்சி
இந்த இடத்திற்கு சென்ற உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் இறந்த பன்றிகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆய்வகத்திற்கு அனுப்பினர். மேலும் கோபாலில் உள்ள உயர் விலங்கு தேசிய நிறுவனத்திலும் இறந்த பண்புகளை மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டன. சோதனை முடிவுகளின் அடிப்படையில் அங்குள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பல பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே கூறியது போல ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய் என்பதால் அப்பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

பன்றிகளை கொல்ல முடிவு
மேலும் அந்த பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் சுமார் 360க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்லப்பட்ட பன்றிகளை மிக ஆழத்தில் புதைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேரள மாநிலத்தில் மூன்று பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக பன்றிக்காய்ச்சல் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications