எடா... எடி என்று பேசாதீங்க கண்ணியமாக பேசுங்க - காவல்துறைக்கு உத்தரவிட்ட கேரளா ஹைகோர்ட்
மக்களுடன் பழகும் போது கண்ணியமாக இருக்குமாறு காவல்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்: பொதுமக்களுடன் பழகும் போது 'எட போடா' மற்றும் 'எட அல்லது எடி' போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினருக்கு கேரளா மாநிர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களிடம் பேசும் பேது கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருச்சூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது இந்த கவனிப்பு செய்யப்பட்டது. கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்கள் வெளியே வரும் போது சோதனை செய்யும் காவல்துறை அதிகாரிகள் சிலர் தவறாக நடந்து கொண்டதாகவும் மரியாதைக்குறைவாக பேசியதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.

வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாநில காவல்துறையினருக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தது. நீதிபதி தேவன் ராமச்சந்திரன், கேரள காவல்துறை தலைமை இயக்குனருக்கு முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். காவல்துறையினர் பொதுமக்களுடன் பழகும் போது 'எட போடா' மற்றும் 'எட அல்லது எடி' போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
மக்களுடன் பேசும் போது மலையாள பேச்சுவழக்கு மொழியை பயன்படுத்துவதை நிறுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். மக்களை அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் மற்றும் அவர்களுடன் பழகும் போது மிகவும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மலையாள பேச்சு வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு காவல்துறை அதிகாரிகளைக் கேட்குமாறு டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார் மேலும் மக்களுடன் பழகும் போது போலீசார் கண்ணியமாக இருக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காவல்துறையினர் பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ பொதுமக்களிடம் நடந்து கொள்ளக்கூடாது என்று காவல்துறை தலைவர் கூறியிருந்தார். கொரோனா லாக்டவுன் காலத்தில் பிற அரசுத் துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்துறையினர், உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறையினர், தூய்மை பணியாளர்கள் போன்றவர்களுடன் வாக்குவாதத்தில்ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைப்பது போன்ற காரியங்களில் எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக் கூடாது. பொதுமக்களை கண்ணியமான முறையில் அறிவுறுத்தி அவர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும். வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிகளிடம் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்துக்கொள்ளுமாறு கண்ணியமான முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications