விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்.. நிலச்சரிவு மீட்பு பணிகளை பார்வையிட சென்றபோது சோகம்!
வயநாடு: கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் கார் விபத்தில் சிக்கியதில், அவர் காயமடைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வயநாடு நோக்கிச் சென்ற கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே விபத்துக்குள்ளானது.
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரிய நிலச்சரிவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு, சூரல்மலா, முண்டக்கை, மலப்புரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 150-ஐ கடந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிலச்சரிவில் சாலைகள், பாலங்கள் மூழ்கியதால் பல்வேறு இடங்களில் மீட்புப்படையினர் கடுமையான சவால்களை எதிர்கொண்டனர். கேரள மீட்புப்படையினர் மட்டுமல்லாது, தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும் மீட்பு படையினர் இன்று இரண்டாவது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி பலரைக் காணவில்லை எனவும் அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளதால் இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

இந்நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வயநாட்டுக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே விபத்துக்குள்ளானது. மஞ்சேரியில் இன்று காலை வீணா ஜார்ஜ் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கம்பம் மீது மோதியது.

இந்த விபத்தில் சிக்கிய அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு தலை மற்றும் கைகளில் சிறு காயங்கள் ஏற்பட்டுளன. இதனையடுத்து அவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை கேரள மாநில சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications