திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது ஒதுக்கப்பட்ட மக்களுக்கான விருது... புன்னகையோடு கூறும் மிஸ் டிரான்ஸ் குளோபல் ஸ்ருதி சித்தாரா

2021ஆம் ஆண்டில் மிஸ் டிரான்ஸ் குளோபல் டைட்டில் பட்டத்தைப் பெ காரணமாகவும், எனக்கு துணையாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி என்று மிஸ் டிரான்ஸ் குளோபல் பட்டம் வென்ற ஸ்ருதி சித்தாரா கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: எனக்காக, நான் சார்ந்துள்ள எனது சமூகத்திற்காக, என் நாட்டிற்காக, உலக திருநங்கை அமைப்புக்காக, ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட என அனைவருக்குமான விருதாக இந்த பட்டத்தை பார்க்கிறேன் என்று மிஸ் டிரான்ஸ் குளோபல் பட்டம் வென்ற ஸ்ருதி சித்தாரா கூறியுள்ளார்.

உலக திருநங்கை அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த திருநங்கை ஸ்ருதி சித்தரா மிஸ் டிரான்ஸ் குளோபல் பட்டம் வென்றுள்ளார். இந்தியர் ஒருவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

உலகளவில் பெண்களுக்கென அழகிப் போட்டி நடைபெறுவது போல திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. கொரோனா காரணமாக நேரடியாக இல்லாமல் ஆன்லைன் வாயிலாக இந்த போட்டி நடத்தப்பட்டது.

தலைநகரில் பதற்றம்.. டெல்லியில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா.. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு உறுதிதலைநகரில் பதற்றம்.. டெல்லியில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா.. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு உறுதி

உலக திருநங்கை அழகி

உலக திருநங்கை அழகி

கடந்த 6 மாதங்களாக இந்த போட்டி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வந்தது. இந்தியா சார்பாக இப்போட்டியில் கலந்து கொண்ட கேரளாவைச் சேர்ந்த 25 வயதான ஸ்ருதி சித்தாரா இப்போட்டியில் மிஸ் டிரான்ஸ் குளோபல் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றிருக்கிறார்.

லண்டன் செல்லப்போகும் ஸ்ருதி சித்தாரா

லண்டன் செல்லப்போகும் ஸ்ருதி சித்தாரா

டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மிஸ். திருநங்கை பட்டம் வென்றதற்கான விருது ஸ்ருதி சித்தாராவுக்கு ஆன்லைன் முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் சித்தாராவிற்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தாரா Most Eloquent Queen என்ற பட்டத்தையும் இதே போட்டியில் வென்றிருக்கிறார்.

மிகப்பெரிய மகிழ்ச்சி

மிகப்பெரிய மகிழ்ச்சி

கேரளாவில் வைக்கோம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ருதி சித்தாரா, இந்த விருது வென்றது பற்றி ஸ்ருதி சித்தாரா தனது ட்விட்டர் பதிவில், ''மிஸ் ட்ரான்ஸ் குளோபல் விருது 2021 பெற்றுள்ளேன். இதற்கான மகிழ்ச்சி எனக்கு மிகவும் பெரியது என்று குறிப்பிட்டுள்ளார். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளும் நோக்கில் என்னை தயார் படுத்திக் கொண்டிருந்தேன். தற்போது இந்த வெற்றியின் மூலம் அதற்கு நான் விடை கொடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான பயணம்

வெற்றிகரமான பயணம்

எனக்கு, என் சமூகத்துக்கு, என் நாட்டுக்கு, அனைத்து மாற்றுப் பாலின சமுதாயத்துக்கு, எங்கெல்லாம் மக்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கான புன்னகை இது. என்னுடைய வெற்றிகரமான பயணத்துக்குப் பின்னால் இருக்கும் அனைவருக்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.

கேரளாவின் புதல்வி

கேரளாவின் புதல்வி

விருது பெற்ற ஸ்ருதி சித்தாராவுக்கு கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கேரள மண்ணின் புதல்வியான ஸ்ருதி சித்தாரா மிஸ் ட்ரான்ஸ் குளோபல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நம்முடைய சமுதாயத்தின் குறுகிய மனப்பான்மை மற்றும் முன் தீர்மானங்களுக்கு எதிராகப் போரிட்டு இந்த விருதை ஸ்ருதி பெற்றுள்ளார். இது கேரளாவுக்குப் புகழ் சேர்க்கும் ஒன்று. வாழ்த்துகள் ஸ்ருதி என்று அமைச்சர் பிந்து பதிவிட்டுள்ளார்.

2 மற்றும் 3வது இடம்

2 மற்றும் 3வது இடம்

மிஸ் திருநங்கை போட்டியில் ஸ்ருதி சித்தாரா பட்டம் வென்றுள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த அழகிகள் பெற்றனர்.

English summary
Miss Trans Global Sruthy Sithara has said , I never expected such a feat. I have been preparing and participating in the competition for months. And now, it all has ended on such a high note, Sruthi Sithara told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X