பெட்ரூமில் கேமரா..கட்டிலில் வாய்ஸ் ரெக்கார்டர்..“ஐ நோ” சைக்கோ கணவன்.. தற்கொலை செய்த பெண் ஜர்னலிஸ்ட்
திருவனந்தபுரம் : பெட்ரூமில் கேமரா பொருத்துவது கட்டிலுக்கு அடியில் வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட சைக்கோ கணவனை சந்தேக சேட்டைகளால் இன்னலுக்கு ஆளான பெண் ஊடகவியலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் உள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளரான ஸ்ருதி நாராயணன் சீனியர் சப் எடிட்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அலுவலகத்திற்கு செல்லாமல் இருந்த அவர், வேலவைட்ஃபீல்டில் உள்ள தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெண் பத்திரிகையாளர்
கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியை ஸ்ருதிக்கும் கேரளா தலிப்பறம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுருதி பெங்களூரூவில் பணியாற்றி வந்த நிலையில், திருமணமான முதல் நாளிலிருந்தே அனீஸ் ஸ்ருதியிடம் சந்தேகத்துடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் படுக்கையறைக்குள் கேமரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சந்தேக கணவன்
அதேபோல் குடும்ப சண்டையின் பொழுது இரண்டு முறை ஸ்ருதியை கொலை செய்யவும் அனீஸ் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலமுறை ஸ்ருதியின் தயார் செல்போனில் அழைத்த போதும் ஸ்ருதி செல்போனை எடுக்கவில்லை. இதனால் பயந்துபோன அவரின் தயார் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலாளிக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். பின்னர் ஸ்ருதி தங்கியிருந்த வீட்டில் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்த நிலையில் கதவை திறக்கவில்லை.

தற்கொலை கடிதம்
இதனால் பால்கனி வழியாக சென்று கதவை உடைத்த பொழுது ஸ்ருதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஸ்ருதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில் சைக்கோ கணவன் அனீஸ் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். "நான் என் வாழ்க்கையை முடிக்கப் போகிறேன், இரண்டு பேர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். நீங்களும் நானும்" என்று அவர் தனது கணவருக்கு எழுதிய தற்கொலை கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் விசாரணை
மேலும் தன் கணவன் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் காது கேளாத மற்றும் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படியும், 20 நிமிடங்களுக்கு மேல் அவனது சித்திரவதையை யாராலும் தாங்க முடியாது. "இந்த கொடுமையான வாழ்க்கையிலிருந்து நான் தப்பிப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன், உங்கள் வாழ்க்கையில் நான் இல்லாததால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்" என்று மார்ச் 20ஆம் தேதி எழுதிய தற்கொலை கடித்தத்தில் அவர் கூறியுள்ளார். அந்த வீட்டில் மூன்று விதமான தற்கொலைக் கடிதங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications