கரோடு TO கன்னியாகுமரி.. NH 66 நெடுஞ்சாலையால் ஏகப்பட்ட பலன்கள்.. தாமதத்தால் தவிக்கும் மக்கள்
திருவனந்தபுரம்: கரோடு மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் NH 66 நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் 4 ஆண்டுகளைக் கடந்தும் மந்தமாக நடைபெற்று வருவது அப்பகுதியின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள முக்காலா- கரோடு NH 66 புறவழிச்சாலை இந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் போது, அது மக்களுக்குப் பெரியளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இந்த நெடுஞ்சாலையில் கரோடு மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் மீதமுள்ள பாதையில் கட்டுமானப் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. இது தெற்கு கேரளா மற்றும் தென் தமிழகத்தின் வளர்ச்சி வாய்ப்புகள் பாதிக்கும்

என்ன சிக்கல்
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உள்கட்டமைப்பு நிபுணரான ஸ்ரீகுமார் கே நாயர் என்பவர் இது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மண்டல அலுவலகத்திற்கு ஆர்டிஐ கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நெடுஞ்சாலைகள் ஆணையம் அளித்த பதிலில், சாலை அமைக்கத் தேவைப்படும் செம்மண் போதியளவில் கிடைப்பதில் உள்ள சிக்கல், நிலம் கையகப்படுத்துதலில் உள்ள பிரச்சினை காரணமாகவே பணியை முடிப்பதில் பெரும் சவாலாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கேள்வி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை திருவனந்தபுரம் தொழில் வர்த்தக சங்கத்தின் (டி.சி.சி.ஐ.) நிர்வாகிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இருந்தாலும் கூட இந்த விவகாரத்தில் இன்னும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முக்காலா- கரோ வரையில் சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ள எல் அண்ட் டி நிறுவனம் தான் தமிழ்நாட்டிலும் இந்த நெடுஞ்சாலை 66ஐ அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ளது. அவர்களால் முக்காலா- கரோ வரை சாலை அமைக்க முடியும் போது, ஏன் அதைக் குமரி வரை போட முடியவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏன் முக்கியம்
இது குறித்து ஆர்டிஐ கோரி விண்ணப்பித்த ஸ்ரீகுமார் கூறுகையில், "கன்னியாகுமரி வரை இந்த நெடுஞ்சாலை 66ஐ போட வேண்டியது முக்கியம். தெற்கு கேரளா குறிப்பாகத் திருவனந்தபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியம். ஏனெனில், நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் நாட்டின் மிக நீளமான நெடுஞ்சாலையான NH 44 சாலையுடன் இது சென்று சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

விழிஞம் துறைமுகம்
அதிலும் குறிப்பாக விழிஞம் துறைமுகம் செயல்பாட்டிற்கு வரும் போது, நாட்டின் பிற பகுதிகளை இந்த துறைமுகத்துடன் இணைக்கும் முக்கிய சாலையாக இதுவே இருக்கும். இருப்பினும், குமரி வரை இந்த சாலையை உடனடியாக அமைக்காவிட்டால் இதற்குச் சாத்தியமில்லை. குறைந்தபட்சம் நாகர்கோவிலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரோடு முதல் வில்லுக்குறி வரையிலான 27 கிலோமீட்டர் சாலையையாவது முதலில் அதிகாரிகள் அமைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அடுத்து என்ன
தமிழ்நாட்டில் இந்த சாலையை அமைக்கும் ஒப்பந்தத்தில் இருந்து எல் அண்ட் டி நிறுவனம் வெளியேறி உள்ளதாகவும் இதனால் மீதமுள்ள பகுதிகளின் பணிகளை முடிக்க டெண்டர் விட நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வளர்ச்சிக்கு இது முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் திருவனந்தபுரம் தொழில் வர்த்தக சங்கத்தினர் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகம்
இது தொடர்பாகத் திருவனந்தபுரம் தொழில் வர்த்தக சங்க தலைவர் எஸ் என் ரெகுச்சந்திரன் நாயர் கூறுகையில், " திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி வரையிலான இந்த வழித்தடத்தை தொழில்துறை வழித்தடமாக மேம்படுத்துவதாகத் தமிழக முதல்வர் உறுதியளித்திருந்தார். எனவே, இந்த சாலை குமரி வரை போடப்பட்டால் கேரளா மற்றும் தமிழ்நாடு என இரு மாநிலங்களும் பலன் பெறும். சொல்லப்போனால் விழிஞம் துறைமுகம் தமிழகம் அதிக பலன்களைப் பெறும்" என்றார். பன்வெல்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையை மேம்படுத்தும் வகையில் கஜ கூட்டம் முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை விரிவாக்கத் திட்டம் கடந்த ஜூலை 2017 இல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications