உடம்பெல்லாம் கீறி..கறி மசாலா தடவி! நடுநடுங்க வைத்த கேரள நரபலி! அடுத்தடுத்து வெளியாகும் ஷாக் தகவல்கள்
திருவனந்தபுரம் : கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாளுக்கு நாள் அது தொடர்பான பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகிறது அந்த வகையில் கொல்லப்படுவதற்கு முன் இருவரின் உடல்களின் கீறி அதில் கறி மசாலா பொடி தடவி கொடுமைப்படுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
கேரள மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை நரபலி சம்பவம் ஏற்படுத்தியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ள நிலையில் இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பகவல்சிங், லைலா மற்றும் பெரம்புவாரைச் சேர்ந்த முகம்மது ஷஃபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பகவால் சிங் வீட்டில் போலீசார் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் 10 கிலோ மனித இறைச்சி மற்றும் மனித எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள நரபலி
அரிவாள் மற்றும் கத்தியால் உடலை வெட்டியதில் வீட்டின் பல்வேறு இடங்களில் ரத்தக்கறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்லப்படுவதற்கு முன் இருவரின் உடல்களின் கீறி அதில் கறி மசாலா பொடி தடவி கொடுமைப்படுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நரபலி கொடுப்பதற்கு முன்பதாக பத்மா மற்றும் ரோஸ்லி இதுவரையும் கொடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள் இருவரும் உயிருடன் இருக்கும் போதே உடலில் கத்தியால் பல இடங்களில் கீரி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

கத்தியால் கீறி கொடுமை
காயங்களில் ரத்தம் வந்த போது இருவரும் கதறி அழுத நிலையில், காயங்களில் சமயலுக்கு பயன்படுத்தும் கறி மசாலாவை தடவி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. குற்றவாளிகள் மூவரையும் தனித்தனியாகவும் ஒன்றாக வைத்தும் விசாரித்த போது இந்த தகவல் வெளியானது.

போலி கணக்குகள்
ஏற்கனவே பகவத்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஏற்கனவே ஒரு பெண்ணை கொலை செய்ததோடு அவரது மாமிசத்தை விட்டு 20 லட்சம் ரூபாய் வரை பணம் திரட்டி இருக்கின்றனர். முகமது சபிக்கு பெண்களின் பெயரை மூன்று பேஸ்புக் கணக்குகள் இருந்ததும் அதன் மூலம் பல பெண்களிடம் பேசி நட்பு கொண்டு பின்னர் அவர்களை நரபலிக்கு தயாராக வைத்திருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடும் தண்டனை
ஒருபுறம் போலீசாரின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. கேரளா அரசு தாமதம் செய்யாமல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் எனவும் கொடூர செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடூர தண்டனையை சரியாக இருக்கும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications