திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கல்... மேலும் 47 பேருக்கு காய்ச்சல் பரவியது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியானதில், மேலும் 47 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.

கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, எர்ணாகுளம் மாவட்டத்தில் அந்த இளைஞருக்கு தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More than 47 peoples infections with Nipah flu symptoms In Kerala

இந்தநிலையில், கல்லூரி மாணவருடன் நெருங்கி பழகியவர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் என்று 330 பேரை மருத்துவ அதிகாரிகள் தங்களது கண்காணிப்பில் கொண்டு வந்தனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பரவி உள்ளதா? என்பதை கண்டறிய, ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 47 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. அவர்களுடன் 86 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம்.. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை! வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம்.. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை!

நிபா வைரஸ் தாக்குதலுக்கென்று, பிரத்தியேக சிகிச்சைகள் எதுவும் இதுவரை இல்லை. அதனால், வைரஸ் தாக்கியவர்களை, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. 'நிபா' வைரசை சமாளிக்க மாநில சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதற்கிடையில் நோயியல் வல்லுனர்கள் குழுவும் கேரளாவுக்கு வந்துள்ளது. இந்த குழுவில் உள்ளவர்கள் நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் வவ்வால்களை பிடித்து அதன் ரத்தத்தை பரிசோதனை செய்து வருகிறார்கள். வவ்வால், அணில் போன்றவை கடித்து போட்ட பழங்களையும் சேகரித்து நிபா வைரஸ் பரவுவது பற்றி கண்டறிந்து வருகிறார்கள்.

கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் நர்சு உள்பட 17 பேர் பலியானார்கள். அதன் பிறகு நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், கேரளாவில் பணியாற்றி வந்த கடலூரை சேர்ந்த நடராஜன் என்பவர் நிபா வைரஸ் அறிகுறியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு நிபா வைரஸ் இல்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
Blood test results revealed that more than 47 people have a Nipah virus symptom In Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X