சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. டிசம்பர் 25, 26 தேதிகளில் ஸ்பாட் புக்கிங் ரத்து
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டில் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வது வழக்கம். மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர்.

நாடு முழுவதும் இருந்து தினசரி சராசரியாக 70,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரள உயர்நீதிமன்றம் சபரிமலை தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு சில முக்கிய உத்தரவுகளை வழங்கியுள்ளது. விஜபிகளுக்கான சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்க கூடாது என்றும், பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை சீசனையொட்டி, நடப்பு ஆண்டில் இதுவரை சபரிமலைக்கு லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டில் பக்தர்களின் கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இந்த ஆண்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்ததால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
டிசம்பர் 18 ஆம் தேதி இரவு 10 மணி வரை 26 லட்சத்து 8 ஆயிரத்து 349 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது 27 லட்சத்தைக் கடந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடைபெற்று வருகிறது. மகரவிளக்கு பூஜையின்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கான அனுமதி வழங்கப்படும்.
பூஜை காலத்தில் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். அதேபோல, முன்பதிவு செய்யும்போதே எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம். இந்நிலையில், நடப்பு ஆண்டில் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலையில் டிசம்பர் 25, 26 ஆம் தேதிகளில் 50 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி வழங்கப்படும். ஜனவரி 12, 14 ஆம் தேதிகளில் தலா 50 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படும். மேற்கண்ட இந்த நாட்களில் மட்டும் ஸ்பாட் புக்கிங் வசதி கிடையாது என்று சபரிமலை தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications