டிக்டிக்! தெர்மல் ஸ்கேனரில் வந்த சிக்னல்! வயநாட்டில் ஓடி போய் தோண்டி பார்த்தால்.. ராணுவத்திற்கு ஷாக்
வயநாடு: வயநாட்டில் நடந்த தேடுதலின் போது இந்திய ராணுவத்தின் தெர்மல் ஸ்கேனர் இடிபாடுகளுக்கு அடியில் உயிர்கள் இருப்பதைக் கண்டறிந்ததையடுத்து, அங்கே கடுமையான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் நடந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே இதுவரை 340 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட 700 பேர் வரை காணவில்லை. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.

மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை. இதன் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய மூன்று கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.
ஷாக்கிங் சம்பவம்: வயநாட்டில் நடந்த தேடுதலின் போது இந்திய ராணுவத்தின் தெர்மல் ஸ்கேனர் இடிபாடுகளுக்கு அடியில் உயிர்கள் இருப்பதைக் கண்டறிந்ததையடுத்து, அங்கே கடுமையான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் நடந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அங்கே இருந்த அனைவரின் பார்வையும் முண்டக்காய் மேல் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்த அந்த இடத்தில்தான் இருந்தது. பல மணி நேரம் அங்கே தேடுதல் வேட்டை நடந்தது.
உள்ளே இருந்து பீப் பீப் என்று சிக்னல் வந்தது. மாலை 4.30 மணியளவில் தேடுதலின் போது இடிபாடுகளுக்கு அடியில் உயிர்கள் இருப்பதாக.. தெர்மல் ஸ்கேனர் கண்டறிந்தது. அந்த சிக்னல் பொதுவாக உள்ளே உயிர் இருப்பதற்கான அறிகுறி ஆகும். இதையடுத்து அங்கே தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கே ஊரே கூடியது. கிட்டத்தட்ட 300 பேர் மீட்பு பணிகளை பார்க்க அங்கே கூடினர்.
உள்ளே மீட்கப்படும் நபர்களை ஆர்வமாக மக்கள் அழைத்தனர். அதேபோல் அங்கே ஆம்புலன்ஸ்கள் ரெடியாக வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தேடுதலை மேற்கொண்ட நிபுணர், சேற்றின் அடியில் மனிதனோ, விலங்குகளோ இல்லை என்று உறுதிப்படுத்தினர். இதனால் அங்கே கூடி இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே தோண்ட தோண்ட ஒன்றும் இல்லை என்றதும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
என்ன நடந்தது?: ஸ்கேனர் தவளை அல்லது பாம்பு இருப்பதை கண்டறிந்திருக்கலாம் என்றார். மண் அள்ளும் கருவிகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும், அங்கு மனிதனோ, விலங்குகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மாலை 5.30 மணியுடன் தேடுதல் பணியை ராணுவம் நிறுத்தி வைத்தது.
சிக்னல் கண்டறியப்பட்ட கட்டிடத்தில் இருந்து 3 அடி ஆழத்தில் தேடியதாக ராணுவ வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 3 அடி வரை தோண்டியும் கூட.. உள்ளே உயிரோடு யாரும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. தேடுதல் பலனைத் தராததால், ராணுவ வீரர்கள் நேற்று பணியை நிறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளதால், பணியை நிறுத்துமாறு உள்ளூர்வாசிகள் ராணுவத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளே யாரும் உயிரோடு கிடைக்காத காரணத்தால்.. பணி நிறுத்தப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications