திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டில் இருப்பது இரண்டு பல்பு, ஒரு டிவி.. கேரளாவில் மயக்கம் போட வைத்த கரண்ட் பில் தொகை!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இரண்டு பல்ப் மற்றும் ஒரு டிவி பயன்படுத்தியவருக்கு ரூ.11,359 மின்சார கட்டணம் பில்லாக வந்திருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் இடுக்கி ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்த ஏலக்காய் தோட்ட கூலித்தொழிலாளியின் வீட்டுக்குத்தான் இப்படி பில் வந்துள்ளது.

வழக்கமாக இருக்கு 292 ரூபாய் தான் மின் கட்டணமாக வரும். ஆனால் இப்போது அதை விட 40 மடங்கு அதிகமாக 11,359 ரூபாய்க்கு பில் வந்திருப்பது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீக்கிரமா பண்ணுங்க.. எதையாவது செய்யுங்க.. டெல்லியால் முடியுதே.. நம்மால் முடியாதா.. ராமதாஸ் கோரிக்கை சீக்கிரமா பண்ணுங்க.. எதையாவது செய்யுங்க.. டெல்லியால் முடியுதே.. நம்மால் முடியாதா.. ராமதாஸ் கோரிக்கை

ராஜாக்காடு பஞ்சாயத்து

ராஜாக்காடு பஞ்சாயத்து

கேரள மின்வாரிய அமைச்சர் எம் எம் மணியின் சொந்த ஊரைச் சேர்ந்தவர் தான் அந்த பாதிக்கப்பட்ட நபர். அமைச்சர் மணியின் சொந்த ஊரான பைசன் பள்ளத்தாக்கை ஒட்டியுள்ளதுதான் ராஜாக்காடு பஞ்சாயத்து. இவரது மூத்த மகள் சத்தி குஞ்சுமோன் ராஜாக்காடு பஞ்சாயத்துத் தலைவராக உள்ளார்.

மின் கட்டண தொகை

மின் கட்டண தொகை

தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் எல்லைப்புற பகுதியான ராஜாக்காட்டில் ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார் அந்த கூலி தொழிலாளி. கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக மின் கணக்கீடு கடந்த சில மாதங்களாக எடுக்கப்படாததால் அதற்கு ஈடாக 5601 ரூபாய் வசூலிக்ககப்பட்டிருப்பதாக கேரள மின்வாரியம் தெரிவித்துள்ளது. அத்துடன் நான்கு மாதத்தில் பயன்படுத்திய கட்டணத்தின் பாதி தொகைதான் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

புகார் அளிக்கலாம்

புகார் அளிக்கலாம்

இதனிடையே ஏலக்காய் தோட்ட கூலித்தொழிலாளியைப் போல் கேரளாவில் பலரும் மின் கட்டணம் இந்த முறை கடுமையாக உயர்ந்திருப்பதாக புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார உள் பயனர்கள் பிரிவு அலுவலகங்களில் உள்ள மூத்த கண்காணிப்பாளர்களை அணுகி தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று கேரள மின்வாரியம் கூறியுள்ளது.

வயரிங் பிரச்சனையால்

வயரிங் பிரச்சனையால்

கேரள மாநில மின்சார வாரியம் அதிகரித்த பில் தொகைக்கு காரணம் வயரிங் பிரச்சினை என்று கூறியுள்ளது. வயரிங்க பிரச்சனயால் மின்சாரம் வெளியேறி உள்ளதாகவும் இப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்பாளர்களும் இதேபோன்ற புகார்களுடன் வந்துள்ளனர் என்றும், இது பூமிக்கு அடியில் வயரிங் பிழையால் ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறினர். அதேநேரம் நான்கு மாதத்தில் மின் பயன்பாடுஅதிகரித்து உள்ளதாகவும் அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது கேரள மின் வாரியம்.

English summary
Rs 11,359 bill for two bulbs and a TV at Kerala for a daily wage worker at a cardamom plantation. The Kerala State Electricity Board (KSEB) said the increased bill amount could be due to loss of power caused by wiring problems
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X