ஜப்தி நோட்டீஸ் அனுப்பிய அடுத்த நொடியில் யோகம்.. லாட்டரி பரிசால் ஒவர் நைட்டில் ஒபாமாவான மீன் வியாபாரி
திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு லோனை கட்ட முடியாமல் தவித்த மீன் வியாபாரிக்கு ஜப்தி நோட்டீஸ் கிடைத்த சில மணி நேரங்களில் ரூபாய் 70 லட்சத்துக்கான லாட்டரி பரிசுத்தொகையும் கிடைத்ததால் மீன் வியாபாரி ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்.
கேரளாவில் கடந்த ஓணம் பண்டிகை பம்பர் லாட்டரி சீட்டில் 25 கோடி ரூபாய் முதல் பரிசை அனூப் என்ற ஆட்டோ டிரைவர் தட்டி சென்றார்.
ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆன அனுப் அதன் பிறகு நிம்மதி இன்றி தவிப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு புலம்பியது எல்லாம் வேற கதை..

ஒரே நாளில் கோடீஸ்வரர்
ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டான் என்று சொல்வார்களே அதுபோல ஒரே நாளில் ரூபாய் 25 கோடி பரிசை தட்டி சென்று அனுப் பலரையும் பொறாமை பட வைத்து விட்டார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அனுப் பற்றிய பேச்சுக்களும் அவருக்கு அடித்த அதிர்ஷ்டம் பற்றிய பேச்சுக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இந்த சம்பவம் நடைபெற்று சில வாரங்களே ஆகியிருக்கும் நிலையில் கேரளாவில் லாட்டரி சீட்டு மூலம் மீன் வியாபாரி ஒருவருக்கு 70 லட்சம் பரிசுத்தொகை கிடைத்து உள்ளது.

வங்கி அனுப்பிய ஜப்தி நோட்டீஸ்
இத்தனைக்கும் வாங்கிய கடனை கட்ட முடியாமல் வங்கி அனுப்பிய ஜப்தி நோட்டீஸ் கிடைத்த சில மணி நேரங்களில் பரிசுத்தொகையும் விழுந்து இருக்கிறது. வங்கி நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்து கவலையில் மூழ்கியிருந்த சில மணி நேரத்தில் லாட்டரி சீட்டு மூலம் பணம் கொட்டும் என தெரியவந்து இருப்பதால் தற்போது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளார். கொல்லம் மாவட்டம் மைநாகப்பள்ளியை சேர்ந்த் பூக்குஞ்சு (வயது 40) என்பவருக்குதான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

9 லட்சம் ரூபாய் கடன்
பைக்கில் சென்று வீதி வீதியாக மீன் வியாபாரம் செய்து வருகிறார். அதிர்ஷ்டம் நமக்கும் அடிக்காதா? என்ற ஏக்கத்தில் லாட்டரி சீட்டுக்களை வாங்கி குவிக்கும் பழக்கம் பூக்குஞ்சுவிற்கு இருந்து இருக்கிறது. ஏராளமான கடன்களும் இருந்ததால் வீட்டை அடைமானம் வைத்து வங்கியில் 9 லட்ச ரூபாய் கடனும் வாங்கியிருந்து இருக்கிறார். இந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் வங்கி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

வங்கியில் டெபாசிட் செய்ய போவதாக..
ஆனால், இந்த நோட்டீஸ் வந்த சில மணி நேரங்களில் அக்ஷயா லாட்டரியின் குலுக்கல் முடிவு வந்துள்ளது. இதில் முதல் பரிசான 70 லட்சம் பூக்குஞ்சுவிற்கு கிடைத்துள்ளது. இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்துள்ளார் பூக்குஞ்சு. தற்போது கிடைத்துள்ள ரூபாய் 70 லட்சத்தை வைத்து கடனை அடைத்து விட்டு மீதி பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய போவதாக மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் பூக்குஞ்சு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications