திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தரமான சம்பவம்.. ஸ்கூலுக்குள்ளேயே ஹிஜாப் அணிந்த மாணவிகள்.. "இது எங்கள் பெருமை".. சபாஷ் கேரளா

இது எங்கள் பெருமை என்று ஒரு போட்டாவை பதிவிட்டுள்ளார் கேரள அமைச்சர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஸ்கூலுக்குள்ளேயே ஹிஜாப் அணிந்து பாட்டு பாடிய மாணவிகளின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!

ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் நடத்திய போராட்டமும், 'அவர்கள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என்று இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தியதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால், கர்நாடக மாநில கல்லூரிகளை கலவர நிலவரத்தில் தள்ளியிருக்கின்றன... இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது.. இஸ்லாமிய மாணவிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது கர்நாடகா ஹைகோர்ட்.

நானும் இஸ்லாமிய பெண்தான்..ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றதில்லை..பார்த்ததுமில்லை -பாஜக குஷ்பு கருத்து நானும் இஸ்லாமிய பெண்தான்..ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றதில்லை..பார்த்ததுமில்லை -பாஜக குஷ்பு கருத்து

தலைவர்கள்

தலைவர்கள்

அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த உடைகளை அணிந்து வர தடையும் விதித்துள்ளது.. இதனிடையே கட்சி தலைவர்கள், பொதுநலவாதிகள் உள்பட பலரும் ஹிஜாப் அணிவது குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. கல்வி நிறுவனங்களில், இதுபோன்ற அடையாள உடைகள் தேவையா, யூனிபார்ம் இருக்கும்போதே மற்ற உடைகள் பற்றின பேச்சு எதற்கு? படிக்கிற பிள்ளைகளின் கவனம் சிதறக்கூடும் என்று பெரும்பாலானோர் கருத்து சொல்கிறார்கள்.

 குஷ்பு பதிலடி

குஷ்பு பதிலடி

இன்றுகூட பாஜகவின் குஷ்பு செய்தியாளர்களிடம் இதை பற்றி பேசும்போது, "ஹிஜாப் அணிவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம்.... பள்ளி வாசல் வரை ஹிஜாப் அணியலாம்.. ஆனால் ஸ்கூலுக்குள்ளே போய்விட்டால் ஹிஜாப் அணிவதை ஏற்க முடியாது.. நான் ஒரு இஸ்லாமிய பெண்தான்.. நான் ஹிஜாப் அணிந்து கல்விநிறுவனங்களுக்கு இதுவரை போனதில்லை.. ஸ்கூலுக்கு யூனிபார்முடன் தான் செல்லவேண்டும்" என்றார்.

குஷ்பு

குஷ்பு

ஆனால், குஷ்பு சொன்னதற்கு நேர்மாறான ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.. அங்குள்ள பள்ளி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துள்ளனர்.. ஸ்கூலுக்குள்ளேயே ஹிஜாப் அணிந்துள்ளனர்.. காரணம், அவர்களின் யூனிபார்மே ஹிஜாப் அணிந்தபடியேதான் உள்ளது.. அந்த பள்ளிதான் இன்று மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 பினராயி விஜயன்

பினராயி விஜயன்

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் பூவாச்சல் அரசு பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில், மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.. அப்போது, விழா துவங்கும்முன்பு, இறைவணக்கம் பாடுவது பள்ளிகளில் வழக்கம்.. அந்த வகையில் இந்த பள்ளியிலும், ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகள் பள்ளி சீருடையில் ஒற்றுமையாய் நின்று பாடலை பாடுகிறார்கள்..

 செம போட்டோ

செம போட்டோ

இந்த போட்டோவைதான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி, தன்னுடைய ட்வீட்டில் ஷேர் செய்துள்ளார்.. அதில் 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து கைகளை கட்டி, பாட்டு பாடுகிறார்கள்.. அப்போது மேடையில் பினராயி விஜயன் உட்பட அமைச்சர்கள் எழுந்து நிற்கிறார்கள்.. இந்த போட்டோவை வெளியிட்ட அமைச்சர், "இதுதான் எங்கள் பெருமை" என்று பெருமிதமாக தன்னுடைய ட்வீட்டில் சொல்லி உள்ளார். இந்த ட்வீட்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கண்டனம்

கண்டனம்

முன்னதாக, கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் விவகாரத்துக்கு பினராயி விஜயன் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.. வகுப்புவாதம் நம் நாட்டிற்கு எவ்வளவு ஆபத்தானது என்பதையே இது காட்டுகிறது என்றும், கல்வி நிறுவனங்கள் மதச்சார்பின்மையை வளர்க்கும் இடமாக இருக்க வேண்டும்.. ஆனால், அதற்கு பதிலாக சிறு குழந்தைகளுக்கு வகுப்புவாத விஷத்தை புகுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று செய்தியாளர்களிடம் பேசும்போது தன்னுடைய ஆதங்கத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Super Incident: Kerala Education minister shares pic students wearing Hijab CM event says our pride
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X