தாய்நிலம் திரும்பும் அரிகொம்பன் யானை.. கேரளா எல்லையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் நடமாட்டம்!
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டின் களக்காடு வனப்பகுதியில் விடப்பட்ட அரிகொம்பன் எனும் அரிசி கொம்பன் யானை தற்போது கேரளா எல்லையில் இருந்து 15 கி.,மீ தொலைவில் முகாமிட்டுள்ளது.
கேரளாவின் மூணாறு சின்னக்கானல் பகுதியை பூர்வீகமாக கொண்டது அரி கொம்பன் எனும் அரிசி கொம்பன் யானை. அரிசியை அதிகமாக தேடிப் போய் உண்பதால் அரி கொம்பன் என கேரளாவிலும் அரிசி கொம்பன் என தமிழ்நாட்டிலும் இந்த யானை அழைக்கப்பட்டது. கேரளாவில் அரிகொம்பன் யானை மூர்க்கமாக நடந்து கொண்டதாலும் 10க்கும் மேற்பட்டோரை பலி கொண்டதாலும் கேரளா வனத்துறையால் ஏப்ரல் 29-ந் தேதி மூணாறு சின்னக்கானல் சிமெண்ட் பாலம் அருகே மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்டது அரிகொம்பன் யானை.

அங்கிருந்து தேக்கடி புலிகள் சரணாலயம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வனப்பகுதிக்குள் கொண்டுவிடப்பட்டது அரிகொம்பன் யானை. ஆனால் வனப்பகுதி வழியாக தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்துக்குள் நுழைந்தது அரிகொம்பன். கம்பம் நகரில் வீதி உலா வந்ததால் அந்நகரத்தில் 144 தடை உத்தரவு போடும் நிலைமை உருவானது. ஒரு வாரம் தமிழ்நாட்டு எல்லையில் ,மிரட்டல் விடுத்த அரிகொம்பன், சின்ன ஓபுலாபுரம் பகுதியில் பிடிக்கப்பட்டு களக்காடு பகுதியில் கொண்டுபோய்விடப்பட்டது.
களக்காடு பகுதியில் விடப்பட்ட அரிகொம்பன் யானையை தமிழ்நாடு, கேரளா வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குட்டியாறு அணை பகுதியில் நடமாடி வரும் அரிகொம்பன் எப்போது வேண்டுமானாலும் கேரளா வனப்பகுதிக்குள் நுழையலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது கேரளா வனப்பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அரிகொம்பன் நடமாடுவதால் தாங்கள் உன்னிப்பாக கவனிப்பதாக கேரளா வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தமிழ்நாடு வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு, அரிகொம்பன் உறங்குவதாக வெளியிட்ட வீடியோவால் சர்ச்சையானது. அந்த வீடியோ வேறொரு யானையின் உறக்கம் தொடர்பானது; பழைய வீடியோ என நெட்டிசன்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அந்த வீடியோவை அதிகாரி சுப்ரியா சாகு அந்த வீடியோவை தமது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications