அமித்ஷாவை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்.. ‘குஜராத்’ மேட்டர் பற்றி பேசுவாரா? ஹிண்ட் கொடுத்த அமைச்சர்!
திருவனந்தபுரம் : நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று கேரளா செல்கிறார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின்போது, தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் நடமாட்டத்திற்குக் காரணமான குஜராத் துறைமுகம் பற்றி பேசுவார் எனக் கூறப்படுகிறது.
நாளை அமித்ஷாவை சந்திப்பதற்கு முன்பாக இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து சில முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேச இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கேரள அரசுடன் இணக்கமான உறவைப் பேணி வரும் முதல்வர் ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு சாதகமான பதில்களைப் பெற்று வருவாரா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென்மண்டல கவுன்சில் கூட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென் மண்டல கவுன்சிலின் 30வது கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், அந்தமான் நிக்கோபர் மற்றும் லட்சத்தீவுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

கேரளா செல்லும் முதல்வர் ஸ்டாலின்
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் செல்கிறார். மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்க இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அமித்ஷாவுடன்
இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பிரச்சனை குறிப்பாக முல்லை பெரியாறு, மேகதாது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டம் தொடர்பாகவும் பேசுவார் எனக் கூறப்படுகிறது.

போதைப் பொருட்கள்
தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பு தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, நாட்டில் நிலவும் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க மத்திய அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குஜராத்தில் தான் போதை பொருள் விற்பனை அதிகளவில் இருப்பதாகவும், அங்குள்ள துறைமுகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தான் இதுபோன்று நடைபெறுவதாக குற்றச்சாட்டினார்.

அமித்ஷா சந்திப்புக்கு முன்பு
குஜராத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக அமைச்சர் போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு குஜராத் காரணம் எனப் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதனால், அமித்ஷா உடனான சந்திப்பின்போதும் இதுகுறித்து ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பினராயி விஜயனுடன்
முன்னதாக, கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஸ்டாலின் பினராய் விஜயனுடன் இரு மாநில உறவுகள் குறித்து பேச உள்ளார். குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை பிரச்னைகள் குறித்து பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. பேபி அணை முன் உள்ள 15 மரங்களை வெட்ட வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. முதலில் கேரளா இதற்கு சம்மதித்த போதிலும், பின்னர் முடிவை மாற்றிக்கொண்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாகவும் இன்றைய சந்திப்பில் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.
-
சேலத்தில் ஸ்டாலின், கமல்ஹாசன் முன்பே.. விஜய்யை பங்கமாக கலாய்த்த பிரேமலதா -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications