போடி டூ மூணாறு.. வேறலெவலில் மாறிய கடவுள் தேசத்தின் நுழைவு வாயில்.. மிகப்பெரிய குட்நியூஸ்
தேனி : தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடியில் இருந்து கேராளவின் மூணாறு வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மூணாறு-போடிமெட்டு இருவழிச்சாலை விரிவாக்க பணி நிறைவடைந்துள்ளதால், வரும் ஆகஸ்ட் 17-ந்தேதி அன்று நிதின் கட்காரி திறந்து வைக்கிறார்.
தேனி மாவட்டம் வழியாக கேரளா சென்றால், இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம். போடி மெட்டு வழியாக மூணாறு அடைந்த அங்கிருந்து கொச்சி சென்றால், கேரளாவை ஏன் கடவுளின் தேசம் என்று எல்லோரும் சொல்கிறார்கள் என்பதை நிச்சயம் அறிய முடியும்.

அதேநேரம் இடுக்கி மாவட்டம் மூணாறு முதல் போடிமெட்டு வரையில் உள்ள கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மிக குறுகிய சாலையாக இருந்தது. இந்த சாலையை நல்ல அகலமான மழைநீர் வடிகாலுடன் கூடிய இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
கடந்த 2017-ம் ஆண்டு இதற்கானபணிகள் தொடங்கியது. மூணாறு-போடிமெட்டு இடையே சுமார் 42 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணிக்கு ரூ.381. 76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலையில் ஒரு இடத்தில் சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. லாக்காடு என்ற இடத்தில் சுங்கச்சாவடியும் மைக்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்க பணிகள் 3 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டிய நிலையில், லாக்காடு, கேப்ரோடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. குறிப்பாக 2018ம் ஆண்டு பெய்த பேய்மழை மூணாறு பகுதியை மொத்த புரட்டி போட்டிருந்தது. கடும் சவால்களுக்கு நடுவில் இருவழிப்பாதையாக போடி மெட்டு மூணாறு பாதை மாறி உள்ளது. ஏற்கனவே போடி மெட்டு முதல் தேனி வரை சாலை மிக அருமையாக இருக்கும். இப்போது இந்த சாலை பணிகளும் நிறைவு பெற்றுள்ளதால், கடவுளின் தேசத்து நுழைவு வாயில் வேறலெவலில் மாறி உள்ளது.
போடி மெட்டு மூணாறு பாதை பணிகள் முடிந்துவிட்டதால் இந்த இருவழிச்சாலையை வருகிற ஆகஸ்ட 17-ந்தேதி திறக்கப்படுகிறது. மூணாறில் சாலை திறப்பு விழா நடைபெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டு, போடி மெட்டு மூணாறு சாலையை திறந்து வைக்கிறாராம்.
இந்த பணிகள் முடிந்துவிட்டதால் அடுத்ததாக மூணாறில் இருந்து எர்ணாகுளம் வரையிலான உள்ள கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையிலும் இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. அதன்படி மூணாறு-எர்ணாகுளம் இடையே 124 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்க பணிக்கு மத்திய அரசு ரூ.910 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்காக சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நேரியமங்கலத்தில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வருகிற 17-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்த பணியையும் தொடங்கி வைக்க உள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications