அதீத காற்று+ பிச்சு உதறும் கனமழை.. நீலகிரியில் 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
நீலகிரி: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பருவமழை தொடங்கியது முதலே மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகரில் மாலை நேரங்களில் பெரும்பாலான நாட்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

அதேபோல மேற்குத் தொடர்ச்சியை மலை அருகே உள்ள பகுதிகளிலும் கூட தொடர்ச்சியாக மழை கொட்டி வருகிறது. பல நாட்கள் நீலகிரி, கோவை பகுதிகளில் தீவிர மழை கொட்டி வருகிறது.
நீலகிரி மாவட்டம்: அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. கடந்த ஓரிரு வாரத்தில் மட்டும் அங்குப் பல நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. அந்தளவுக்கு அங்கே கனமழை கொட்டியது. இதனால் அங்கே வாழும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீலகிரியில் பல இடங்களில் இந்த கனமழையால் பொதுமக்களால் சகஜமாக வெளியே கூட செல்ல முடிவில்லை..
விடுமுறை: இன்றைய தினமும் அங்கே கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்த அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக இன்று ஜூலை 22ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அங்குள்ள உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அங்கே காற்றின் வேகம் அதிகமாக மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கருதி அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "இன்று ஜூலை 22ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 23 முதல் 27 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications