விடாமல் பெய்யும் மழை.. தாமிரபரணி கரையோர மக்களுக்கு நெல்லை கலெக்டர் எச்சரிக்கை.. முக்கிய அறிவிப்பு
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இரு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மீட்பு படையினர் பொதுமக்களை மீட்டனர். தற்போது இரு மாவட்டங்களிலும் வெள்ளம் வடிந்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியில் மழை என்பது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு என்பது அதிகரிக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆங்காங்கேபெய்யும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்லும். பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம்; கால்நடைகளையும் இறக்க வேண்டாம். பெருவெள்ள அபாயம் இல்லை. கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கவும். pic.twitter.com/IiB1BG3Lfq
— District Collector, Tirunelveli (@Collectortnv) January 7, 2024
இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தாமிரபரணி கரையோர மக்களுக்கு முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்யும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்லும். பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம்; கால்நடைகளையும் இறக்க வேண்டாம். பெருவெள்ள அபாயம் இல்லை. கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கவும்'' என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியை பொறுத்தமட்டில் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நிற்காமல் கொட்டிய மழையால் அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. இத்தகைய சூழலில் தான் தொடர்ந்து மழை பெய்யும்போது உபரி நீர் அப்படியே திறக்கப்பட வாய்ப்புள்ளது. நேற்றைய தினம் நேற்றைய தினம் வரை 3000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 7 ஆயிரம் கனஅடி வரை தாமிரபரணியில் திறக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் திருநெல்வேலியை பொறுத்தமட்டில் இன்னும் ஓரிரு நாட்கள் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications