தமிழகத்தில் மழை: சென்னை டூ அரியலூர் வரை மேகங்கள் வெயிட்டிங்! இன்று இரவு சம்பவம்! வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திற்கு இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு இன்று சிறப்பான நாள். அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த வடதமிழகத்திற்கு பரவலாக இன்று மழை பெய்யும்.

திருவண்ணாமலை, கடலூர், புதுவை, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் டெல்டா மாவட்டங்களுக்கும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இன்று மாலையோ அல்லது இரவோ மழை எந்தளவிற்கு தீவிரமாக பெய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்று பெய்யும் மழையால் சில இடங்களில் 100 மி.மீ மழை கூட பெய்ய வாய்ப்புள்ளது. இது வெப்பச்சலனத்தால் பெய்யும் மழை என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அது போல் நேற்றைய பதிவில் அவர் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத்திற்கும் இந்த மழைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அக்டோபர் மத்தியில் நமக்கு பலனை கொடுக்கும் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பிருக்கிறது. அது வட தமிழகம் டூ தெற்கு ஆந்திரா கடலோரங்களை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பிருக்கிறது. அது போல் இந்த அக்டோபர் மாதம் வடதமிழகத்திற்கு மழையை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3ஆவது வாரம் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழையை பொருத்தவரையில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தமிழகத்தில் இயல்பைவிட 14 சதவீதம் அதிகமாக மழை மழை பதிவாகியுள்ளது. வட கிழக்கு பருவமழையை பொருத்தவரையில் அக்டோபர் 20ம் தேதிதான் தொடங்கும்.
கேரளா, ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக 112 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications