ரெயின்சு.. டமால் டுமீல்.. ரிப்பீட்டு.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த முக்கிய வார்னிங்.. வானிலை ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாடு வானிலை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி - திருவண்ணாமலையில் உள்ளவர்களுக்கு கடந்த 3 நாட்களாக மைண்டுவாய்ஸ் - ரெயின்சு.. டமால் டுமீல்.. ரிப்பீட்டுதான்.
மதுரை-சிவகங்கை-புதுக்கோட்டையிலும் மாலை நேரங்களில் ஒரே மாதிரியான மழை பெய்து வருகிறது. தினமும் மாலையில் மழை பெய்கிறது.

தமிழ்நாட்டில் இந்த சீசனில் முதல் மேலடுக்கு சுழற்சி ஏற்பட உள்ளது. இன்னும் 2 நாட்களில் கொமோரின் கடலில் (குமரி கடல்) உருவாக உள்ளது, இது வானிலை ரீதியாக எல்லாவற்றையும் மாற்றுகிறது. காற்று குறுகிய காலத்திற்கு கிழக்கு திசையில் திரும்பும். உள்தமிழ்நாடு, கொங்கு பெல்ட்டில் மழை பெய்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது. காற்று கிழக்கு நோக்கி சென்றால்.. பகல் நேரத்தில் கூட மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
சென்னைக்கு காற்று இருக்காது. காற்று கிழக்கு நோக்கி செல்வதால்.. வேலூர் காற்று சென்னைக்கு வர முடியாது. மேற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மழைக்கு கொஞ்சம் வாய்ப்பு உள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு வானிலை மையம்: இன்னொரு பக்கம் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
11.08.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12.08.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 . 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
13.08.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் டி. மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், விருதுநகர், மதுரை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பதூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
14.08.2024 தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சுன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
15.08.2024 தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலந்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16.08.2024 மற்றும் 17.08 2024. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்; அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36" செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications