Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி மாத பலன்: கடக ராசிக்கு திடீர் பணவரவு.. வேலைவாய்ப்பு கன்ஃபார்ம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் கடக ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சந்திரன் லாபத்தில் அமர்ந்து உங்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தி கொடுக்கப் போகிறார். சில விஷயங்களில் முடிவெடுக்கும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவுகளை எடுத்தாலும் பாசிட்டிவ் சிந்தனைகளை வைத்துக் கொள்வது நல்லது. நிதி வரவு நன்றாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

january-month-rasi-palan-january-month-predictions-for-kadagam-rasi-people

முன்னேற்றம்

வியாபாரத்தில் பெரிய வளர்ச்சி ஏற்படும். நன்மைகள் அனைத்தும் நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். 2 ஆம் இடத்தில் கேது பகவான் இருக்கிறார். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத சேதாரம் ஏற்படும். 2க்கு உரிய சூரியன் 6 ஆம் இடத்தில் இருப்பது, செவ்வாயுடன் சேர்ந்திருப்பது திடீர் வருமானம், அபரிமிதமான வருமானம் ஏற்படும்.

வேலைவாய்ப்பு

பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நல்ல வருமானத்தோடு கூடிய வேலை கிடைக்கும். குழந்தைகளுக்கு பேச்சில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். சூரியன், செவ்வாயுடன் சேர்வதால் சிலருக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். வீட்டினால் வருமானம் ஏற்படும். வீட்டுக் கடன்கள் கைக்கு வந்து சேரும்.

அரசு வேலை

புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் யோகம் உள்ளது. 4க்கு உரிய சுக்கிரன் 6 இல் இருப்பது வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கார் வாங்கும் யோகம் உண்டாகும். 3 ஆம் இடத்துக்கு அதிபதியான புதன் பகவான் 6 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் இன்டர்வியூ அட்டெண்ட் செய்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

கையெழுத்தில் கவனம்

உங்களுடைய பேச்சால் சில எதிரிகள் முளைக்கும் வாய்ப்புண்டு. ஜாமீன் கையெழுத்து, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது கவனம் தேவை. விரயத்தில் குரு பகவான் இருக்கும்போது கடனுக்கான ஆவணங்களை படித்துப் பார்க்காமல் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. கடன் தவணைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

ஆரோக்கியம்

புதிய விஷயங்களை படிக்கும், கற்றுக்கொள்ளும் யோகம் ஏற்படும். வாகனங்கள் பழுதாகும் வாய்ப்புள்ளது. சிறிய சிறிய செலவுகளை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது. பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். செவ்வாய் 6 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் உடம்பில் விட்டமின் சி குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. ரத்தத்தில் குறைபாடு ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. 6 இல் சுக்கிரன் இருப்பதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பண வருமானம் அற்புதமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+