Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் டிரைலர் கொடுத்த ஹைப்.. அமேசானில் பகவந்த் கேசரிக்கு எகிறும் டிமாண்ட்! இப்போ ஓடிடியில் சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் வெளியீடுகளில் அதிக கவனம் பெற்றிருக்கும் படங்களில் விஜயின் ஜனநாயகன் முக்கிய இடம் பிடித்துள்ளது. ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்தே இப்படம் குறித்து பாராட்டுகளுடன் சேர்ந்து கலாய்ப்புகளும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, "இது பகவந்த் கேசரியின் ரீமேக்" என்ற பேச்சு ட்ரெய்லர் வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. அதே நேரத்தில், ட்ரெய்லரில் காணப்பட்ட சில புதிய அம்சங்கள், அரசியல் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் கலவைகள் படம் முழுமையான ரீமேக் அல்ல என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ளது.

Jana Nayagan Vijay

பகவந்த் கேசரி உருவாக்கிய எதிர்பார்ப்பு

பகவந்த் கேசரி திரைப்படம் வெளியான போது, பாலய்யாவின் அதிரடி நடிப்பு, ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் மற்றும் வலுவான இரண்டாம் பாதி ஆகியவை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. இது ஒரு க்ளீன் ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

அதனால் தான், அதே கதைக்கருவை அடிப்படையாகக் கொண்டதாக சொல்லப்படும் ஜனநாயகனுக்கும் அதே அளவிலான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், அந்த மேஜிக்கை அப்படியே மீண்டும் நிகழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்பதையும் ரசிகர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

விஜய்யின் லுக் மற்றும் அரசியல் டச்

ஜனநாயகன் ட்ரெய்லரில் விஜய்யின் லுக், வசனங்கள் மற்றும் அரசியல் டச் ரசிகர்களிடையே பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. "இது சினிமா விஜயா அல்லது அரசியல் விஜயா?" என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. ஒருபக்கம் விஜய்க்கு ஏற்ற கமர்ஷியல் படம் என ரசிகர்கள் கொண்டாட, மறுபக்கம் பகவந்த் கேசரியின் சாயல் இன்னும் தென்படுகிறது என சிலர் கலாய்த்து வருகின்றனர். இதனால், படம் வெளியாவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் ஜனநாயகன் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜனநாயகன் ரீமேக் என்ற பேச்சு படக்குழுவுக்கு பாதகமாக இருக்கும் என நினைத்தால் அது தவறாக முடியும். உண்மையில், இந்த விவாதமே படத்திற்கு பெரிய அளவில் இலவச விளம்பரமாக மாறியுள்ளது. இயக்குநர் எச்.வினோத் "அப்படியே எடுத்தது இல்லை, தமிழ் பார்வைக்கு ஏற்ற மாற்றங்கள் உள்ளன" என்று விளக்கம் அளித்திருந்தாலும், ரசிகர்கள் இறுதி தீர்ப்பை திரையரங்கில் தான் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

பாலய்யா vs விஜய்

பகவந்த் கேசரி பாலய்யாவின் முழு ஒன் மேன் ஷோவாக இருந்தது என்ற கருத்து பொதுவாக நிலவியது. அதேபோல், ஜனநாயகன் விஜய்யின் ஒன் மேன் ஷோவாக இருக்குமா அல்லது கதையின் பலம் அதற்கு துணை நிற்குமா என்ற கேள்வியும் எழுகிறது. குடும்ப ரசிகர்கள் இப்படத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது உண்மையான வெற்றிப் படமாக மாறும் என்பதில் சினிமா வட்டாரமும் ரசிகர்களும் ஒரே கருத்தில் உள்ளனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் ஜனநாயகன் படம் ஏற்றிவிட்ட ஹைப்பால் இப்போது பகவந்த் கேசரி படத்தை பார்ப்பதற்கு அதிகமான ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் அமேசான் பிரைமில் இருக்கும் இந்த படம் இப்போது அதிகமான வியூஸ் பெற்று ஒடிடியில் முதல் இடத்தில் பிடித்திருக்கிறது.

பொங்கல் தீர்ப்பே இறுதி தீர்ப்பு

ட்ரெய்லர், வசனம், ரீமேக் சர்ச்சை, அரசியல் பின்னணி என அனைத்து விஷயங்களும் தற்போது விவாதத்திலேயே உள்ளது. ஆனால், ஜனநாயகன் உண்மையில் தட்டித் தூக்குமா அல்லது பகவந்த் கேசரியின் நிழலிலேயே நின்றுவிடுமா என்ற கேள்விக்கான பதில் பொங்கல் விடுமுறைக்குப் பிறகே கிடைக்கும். அதுவரை, ரசிகர்களின் கலாய்ப்பும், விமர்சனமும், எதிர்பார்ப்பும் ஜனநாயகனை தொடர்ந்து பேச வைக்கும் என்பது மட்டும் உறுதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+