விஜயின் ‛ஜனநாயகன்' வெளியாவதில் சிக்கல்.. தணிக்கை சான்று கிடைப்பதில் தாமதம்.. காரணம் இதுதான்
சென்னை: நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ‛ஜனநாயகன்' ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி ‛ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இந்நிலையில் தான் அவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்க உள்ளது. விஜயும் தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.

இதனால் அவர் திரைப்படத்துக்கு முழுக்கு போட்டுள்ளார். தற்போது தயாராகி உள்ள ‛ஜனநாயகன்' திரைப்படம் தான் தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி ‛ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி திரையரங்கங்களில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. விஜய் பங்கேற்று நடனமாடியதோடு, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
இந்நிலையில் தான் தற்போது ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கிடைக்கவில்லை. ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வாங்கும் பணியை படக்குழு மேற்கொண்டு வருகிறது. படக்குழு சார்பில் திரைப்படம் கடந்த மாதம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டிசம்பர் 19ம் தேதி ‛ஜனநாயகன்' திரைப்படத்தை தணிக்கை குழு பார்த்தது. அப்போது சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை படக்குழு நீக்கி மறு தணிக்கைக்கு அனுப்பியது.
இருப்பினும் தற்போது வரை தணிக்கை சான்று கிடைக்கவில்லை. இன்று ஜனவரி 2ம் தேதி. திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தணிக்கை சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ‛ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
ரூ. 20 லட்சம் கடன் தருவோம்.. இளைஞர்களை ஈர்க்க மேஜர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த தவெக தலைவர் விஜய்! -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான்











Click it and Unblock the Notifications