Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: தை மாதம் பிறக்கும் முன்பே தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. இன்று ரூ.880 அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து இன்று ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை தை மாதம் பிறக்கும் முன்பே தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க டாலரின் மதிப்பு, சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, ரிசர்வ் வங்கி போன்ற பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்ற காரணங்களில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. தங்கத்தின் விலை நாள்தோறும் கடுமையாக அதிகரித்து புதிய விலை உச்சங்களை தொட்டு வருகிறது.

gold price gold

தங்கம் விலை கடந்த ஆண்டு வரலாறு காணாத உச்சம் தொட்டது. கடந்த ஆண்டு இறுதியில் சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டது. அந்த கணிப்பிற்கு ஏற்ப இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஆபரணத் தங்கம் கிராம் ரூ.13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.080க்கும் சவரனுக்கு ரூ.8000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.307க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.15,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை

14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360

12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960

11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400

08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200

07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600

06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)

05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)

04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)

02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320

01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+