கொடூரம்! ஹாரன் அடித்ததால் ஆத்திரம்.. பின்னாலேயே போய் ஸ்கூட்டி மேல் காரை ஏற்றிய பெங்களூர் இளைஞர் கைது
பெங்களூர்: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது.. பின்னால் டூவீலரில் இருந்தவர்கள் ஹாரன் அடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் சிக்னலை தாண்டியவுடன் அவர்கள் மீது வேண்டும் என்றே மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். பைக்கில் சென்ற கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தை படுகாயமடைந்த நிலையில், இது தொடர்பாக ஒருவரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. பீக் ஹவரிஸ் வெளியே சென்றாலே சில மணி நேரமாவது சாலையில் நிற்க வேண்டும் என்ற சூழலே அங்கு இருக்கிறது. இப்படி அதிக நேரம் சாலையிலேயே இருக்கும் சூழல் இருப்பதால் மக்கள் வெறுப்படைகிறார்கள்.

பெங்களூர் சம்பவம்
இதனால் சின்ன சின்ன சம்பவத்திற்குக் கூட அங்கு கைகலப்பு, அடிதடி கூட நடக்கிறது. இதை ஆங்கிலத்தில் road rage என்பார்கள். பெங்களூரில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் பெங்களூரில் சமீபத்தில் நடந்தது..
இந்தச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று அந்த டூவீலரை வேண்டும் என்றே இடித்துவிட்டு நிற்காமல் சென்றனர். கடந்த மாதம் 26ம் தேதி இந்தச் சம்பவம் அரங்கேறியது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இப்போது ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
23 வயது இளைஞர்
எம்.எஸ். ராமையா மருத்துவமனை அருகே இந்தக் கொடூர விபத்து நடந்தது. அன்றைய தினம் கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகியோர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 23 வயதான சுகுருத் என்பவர் ஓட்டி வந்த கார், அதிவேகமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதன் காரணமாக அந்த ஸ்கூட்டர் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியுள்ளது.
இதில் டூவீலரில் சென்று கொண்டு இருந்த குடும்பத்தினர் அனைவரும் படுகாயமடைந்தனர். பெண்ணுக்கு கை, தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. கணவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். அருகிலேயே மருத்துவமனையிலும் இருந்ததால் அவர்களுக்குத் தக்க நேரத்தில் சிகிச்சை கொடுக்க முடிந்தது.
சிசிடிவி
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. முதலில் இது தெரியாமல் நடந்த விபத்தாக இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கார் வேண்டும் என்றே மோதியது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
எதற்காக விபத்து
விபத்து நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சுகுருத்தை அடையாளம் கண்டு இப்போது கைது செய்துள்ளனர். அவர் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது, காயம் ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பு சிக்னலில் அந்த காரும் டூவீலரும் நின்றுள்ளது. அப்போது டூவீலரில் இருந்து ஹாரன் அடித்ததுள்ளனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சுகுருத், திட்டமிட்டு ஸ்கூட்டரை முதலில் முந்திச் செல்ல விட்டுள்ளார். அதன் பிறகு பின்னாலேயே போய் மோதியதாகக் கூறப்படுகிறது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications