For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு வரி ஏய்ப்பைத் தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனால், பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கூறியுள்ளார்.

அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து ஏப்ரல் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசின் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கக் கூடாது என்று பல முறை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு மீண்டும் மீண்டும் ஆதார் எண் அவசியம் என்று கூறிவருவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும், மத்திய அரசு ஆதார் எண் அவசியம் என்று கூறுவதற்கு கண்டனமும் தெரிவித்தது.

ஆதார் எண் இணைப்பு வழக்கு

ஆதார் எண் இணைப்பு வழக்கு

இந்நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி ஆதார் எண் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆதாரை கட்டாயமாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியது. குறிப்பாக வருமான வரி பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படுவதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு

இதற்கு பதிலளித்த மத்திய அரசுத் தரப்பு, பல பான் கார்டுகளைப் பயன்படுத்தி மக்கள் வரி ஏய்ப்பு செய்வதை சுட்டிக்காட்டியது. 99 சதவீத மக்களுக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டதாக அரசுத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையில் அமர்வு , ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய புதிய வருமான வரி சட்டத்தை பரிசீலிக்க முன் வந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி சிக்ரி மக்கள் வரி ஏய்ப்பு செய்வது வெட்கக்கேடானது என்று கருத்து தெரிவித்துள்ளார். வரியை தவிர்ப்பது வேறு ஏய்ப்பது வேறு என்று தாங்கள் புரிந்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆதார் இணைப்பது கட்டாயம்

ஆதார் இணைப்பது கட்டாயம்

வரி ஏய்ப்பு காரணமாகவே மத்திய அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தியிருப்பதாகவும் வரி ஏய்ப்புகளை மத்திய அரசு தடுக்க முயற்சிப்பதாகவும் நீதிபதி சிக்ரி கூறினார். அதனால், வரி ஏய்ப்பைத் தடுக்க பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது அவசியமாகிறது. அதனால், பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்று கூறியுள்ளார்.

English summary
The Supreme Court has said that Modi government to decide validity of linking Aadhaar with Pan card.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X