Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வரை விமர்சனம் செய்து படம் எடுத்தால் விடுவாங்களா? ஜனநாயகன் குறித்து நடிகர் அப்புகுட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லாரும் மதிக்கக் கூடிய ஒரு முதலமைச்சருக்கு எதிராக படம் எடுத்தால் எப்படி விடுவாங்க? என ஜனநாயகன் படம் தாமதம் குறித்து நடிகர் அப்புகுட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் அப்புகுட்டி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எல்லாரும் மதிக்கக் கூடிய ஒரு முதலமைச்சருக்கு எதிராக படம் எடுத்தால் எப்படி விடுவாங்க? எப்படி விடணும்னு எதிர்பார்க்குறீங்க?

Jananayagan

வாய்ப்பு இல்லைல? ஒரு நாட்டையே ஆளக் கூடியவங்கள எவ்ளோ விமர்சனம் பண்ணுவீங்க? அப்புறம் எப்படி விடுவாங்க? அத நாம குறை சொல்ல முடியாது. இவ்வாறு அப்புக் குட்டி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இதில் அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருந்தன. ஜனநாயகனில் விஜய்யின் பெயர் Thalapathy Vetri Kondan (TVK). அது போல் தவெகவின் இரட்டை யானையும் ஜனநாயகனில் இடம் பெற்றுள்ளது.

பாபி தியோல் "மக்களுக்கு நல்லது பண்றேன்னு இதுக்குள்ள வராத, உன்ன காப்பாத்திக்கிட்டு ஓடி போயிடு" என சொல்வதும், இன்னொரு வில்லன் பிரகாஷ்ராஜ் "உன்னால ஒன்னும் பண்ண முடியாது விலகிப்போ" என சொல்வதும் இடம் பெற்றுள்ளது.

அது போல் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வாங்கடான்னு வந்து கொள்ளையடிக்கறீங்க, கொலை பண்றதுக்குமாடா அரசியலுக்கு வரீங்க? என விஜய் சாட்டையால் அடிப்பது போல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. "உன்ன காலி பண்ணிடுவேன், அசிங்கப்படுத்திடுவேன்னு சொல்ற எவனா இருந்தாலும் சரி, திரும்பி போற ஐடியாவே இல்ல" "ஐ யாம் கம்மிங்" என்கிறார்.

நடிகர் விஜயின் கடைசிப் படமான 'ஜனநாயகன்', ஜனவரி 9 அன்று உலகம் முழுவதும் வெளியாகத் திட்டமிடப்பட்டது. ஹெச். வினோத் இயக்கி, கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இப்படத்துக்கு, மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து மறுஆய்வுக்கு அனுப்பியது. இந்த முடிவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

நீதிபதி பி.டி. ஆஷா முன்பு ஜனவரி 7ஆம் தேதி விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜனவரி 9 அன்று தீர்ப்பளித்தார். 'ஜனநாயகன்' படத்தின் மறுஆய்வு உத்தரவில் உள்நோக்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டி அதனை ரத்து செய்த அவர், உடனடியாக 'யு/ஏ' சான்றிதழ் வழங்கவும் மத்திய தணிக்கை வாரியத்திற்கு ஆணையிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தணிக்கை வாரியம் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி எம்.எம். வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்த இந்த மேல்முறையீட்டு வழக்கில், மத்திய தணிக்கை வாரிய வழக்கறிஞர்களான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டனர்.

"வழக்கு ஜனவரி 6 அன்று தொடுக்கப்பட்டு, ஜனவரி 7-ல் விசாரிக்கப்பட்டு, ஜனவரி 9 அன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி பதிலளிக்க அவகாசம் அளிக்கவில்லை. மறுஆய்வு உத்தரவை தயாரிப்புக் குழு கோராத நிலையிலும், தனி நீதிபதி அதனை ரத்து செய்தது ஏற்புடையதல்ல. எனவே, பதிலளிக்க அவகாசம் தேவை; அதுவரை பட வெளியீட்டைத் தடை செய்ய வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தினர்.

தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் சதீஷ் பராசரன், 'யு/ஏ' சான்றிதழ் பரிந்துரைக்கப்பட்ட பிறகும் (டிசம்பர் 22), குழு உறுப்பினர் ஒருவர் மூலம் மறுஆய்வு கோருவது உள்நோக்கம் கொண்டது என்றனர். ஜனவரி 9 உலகளாவிய வெளியீட்டுத் திட்டம் தணிக்கை வாரிய உத்தரவால் பாதிக்கப்பட்டது என்றும், தனி நீதிபதி முழுமையாக விசாரித்தே தீர்ப்பளித்தார் என்றும் விளக்கினர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "தணிக்கை சான்றிதழ் பெறும் முன்பே பட வெளியீட்டுத் தேதியை எப்படி நிர்ணயித்தீர்கள்? நீதிமன்றத்துக்கு தேவையற்ற அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மத்திய தணிக்கை வாரியத்திற்குப் பதிலளிக்கப் போதிய அவகாசம் வழங்க வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் நீதிபதிகள், 'ஜனநாயகன்' படத்தை ஜனவரி 21-ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தனர். மத்திய தணிக்கை வாரியம் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அத்தினத்திற்கு ஒத்திவைத்தனர். இந்த உத்தரவு 'ஜனநாயகன்' பொங்கல் வெளியீட்டில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்புக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+