பாஜகவில் மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் அண்ணாமலை? நயினார் நாகேந்திரனுக்கு எகிறும் பிரஷர்! பரபர பாஜக
சென்னை: தமிழக பாஜகவில் மீண்டும் தலைமை மாற்றம் குறித்த பேச்சு கிளம்பியுள்ளது. நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக இயங்கிக் கொண்டிருக்கும் போதே, முன்னாள் தலைவர் அண்ணாமலை மீண்டும் தலமைப் பொறுப்புக்கு வருவாரா என்ற கிசுகிசுக்கப்படுகிறது. அதே நேரத்தில் நயினார் சிறப்பாக கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போ சமூக வலைதளங்களில் பேசப்படுவது எல்லாம் அண்ணாமலை ஆதரவாளர்கள் கிளப்பிவிட்டது என்கிறார் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள்.
2021 ஆம் ஆண்டு மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, தனது தடாலடி பேச்சுகள், திமுக மீது நேரடியான தாக்குதல் என ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். இதனல் மூலம் தமிழக பாஜகவுக்கு தனி அடையாளத்தை உருவாக்கியவர்.
அண்ணாமலை பிரஸ் மீட் என்றாலே அனல் பறக்கும்.. என்ற நிலை அப்போதைய அரசியல் சூழலில் இருந்தது. இதனால் பாஜக அப்போது ஊடக வெளிச்சத்தில் இருந்தது மட்டுமல்ல, பல இளைஞர்கள் கட்சியில் இணையும் சூழலும் உருவானது.

அண்ணாமலை பாஜக
ஆனால், அவரது கடும் விமர்சனங்கள் திமுக மட்டுமின்றி, கூட்டணி கட்சியான அதிமுகவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா குறுத்த அண்ணாமலையில் பேச்சுகளால், கூட்டணியில் இருந்த அதிமுக கடுமையாக கோபமடைந்தது. ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். இந்த சம்பவம் மத்திய பாஜக தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக பாஜக தலைவர்
அப்போது அண்ணாமலை, "அதிமுக போனாலும் பரவாயில்லை, பாஜக தனித்து போட்டியிட்டாலும் இரட்டை இலக்க வெற்றி பெறும்" என உறுதியாக தலைமையிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பூஜ்ஜியமாக அமைந்தது. இதுவே அண்ணாமலைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அமித் ஷா நேரடியாக தலையிட்டு அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை ஏற்படுத்தினார். அதேபோல், எடப்பாடியின் கோரிக்கையின் பேரில் அண்ணாமலை மாநிலத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
நயினார் நாகேந்திரன்
இதன் பின்னர்தான், அதிமுகவுடன் நல்ல உறவை வைத்திருக்கும் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், நயினார் தலைமையில் கட்சியின் வேகம் குறைந்துவிட்டதாக பாஜக உட்கட்சியில் சிலர் கூறுகின்றனர். "அண்ணாமலை இருந்தபோது பாஜக ஒவ்வொரு நாளும் பேசப்பட்டது. இப்போது கட்சி குறித்து ஊடகங்களில் பேசப்படுவதில்லை" என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே சமயம், நயினாரின் நிதானமான பேச்சும், சமநிலையான அணுகுமுறையும் கட்சியில் அமைதியை உருவாக்கியதாக அவர் தரப்பு விளக்கம் அளிக்கிறது.
அண்ணாமலை திரும்புவாரா?
இதற்கிடையில், அண்ணாமலை வித்யாசமான செயல்பாடுகளை திடீர் திடீரென மேற்கொள்கிறார். ஆன்மீக பயணம், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது என தீவிர அரசியலில் இல்லை. இந்நிலையில், சேலத்தில் அவரது ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டது, நெல்லையில் அண்ணாமலை நற்பணி மன்ற கொடி அறிமுகப்படுத்தப்பட்டது போன்ற நிகழ்வுகள் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அண்ணாமலை பாஜகவில் தனி ஆவர்த்தனம் செய்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாஜக குழப்பம்
இந்நிலையில், பாஜக டெல்லி தலைமை நயினாரின் செயல்பாட்டில் திருப்தியாக உள்ளதா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலை இருந்தபோது கட்சி வாக்கு சதவீதம் உயர்ந்தது என்ற அறிக்கை டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல். இதனால், அண்ணாமலைக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கலாமா என்ற ஆலோசனையில் மத்திய பாஜக ஈடுபட்டுள்ளது. ஆனால் உடனடியாக தலைமை மாற்றம் நடக்கும் வாய்ப்பு குறைவு என வட்டாரங்கள் கூறுகின்றன. அண்ணாமலைக்கு வேறு பொறுப்பு வழங்கப்படலாம், ஆனால் நயினார் நாகேந்திரன் தான் தேர்தல் வரை கட்சியை வழிநடத்திச் செல்வார் என உறுதியாகக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications