விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி.. காங்கிரஸ் நிர்வாகி கிரிஷ் சோடங்கர் ஓபன் டாக்!
சென்னை: தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விளக்கம் கொடுத்துள்ளார். திமுகவுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறிய கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக விரைவில் அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. ஏனென்றால் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சில பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். குறிப்பாக ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்ததோடு, திமுகவையும் அட்டாக் செய்து வந்தார்.

இதனை திமுக தலைமை ரசிக்கவில்லை. அதேபோல் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் திமுக இம்முறை அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்த போது, காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட குழுவை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைத்தது.
ஆனால் தவெக தரப்பில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டு வந்தது. அதேபோல் காங்கிரஸ் நிர்வாகிகளில் திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பலரும் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து கிரிஷ் சோடங்கர் பேசுகையில், சட்டசபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெற்றுள்ளோம். அதேபோல் திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முன்கூட்டியே தொடங்கப்பட்டு, சுமூகமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறிய புகார் தொடர்பாக கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சதீஷ் குமார், செந்தில் குமார் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அகில இந்திய தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேபோல் உட்கட்சி பிரச்சனையை நிர்வாகிகள் பொது தளத்தில் பகிர வேண்டாம்.
அதேபோல் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று நாங்கள் எப்போது சொன்னோம்? ஒரு மாதத்திற்கு முன்பாகதான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினோம். காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தவெகவில் யார் சொன்னது? தவெகவுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி. கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி சுமூகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் யாரோ ஒருவர் யாரையோ சந்தித்தால் நாங்கள் ஏன் பொருட்படுத்த வேண்டும்? அதேபோல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என்று எந்த கட்சியாவது சொல்வார்களா? அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதூ கட்சிகளின் இயல்பு. தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?












Click it and Unblock the Notifications