3ல் ஒரு பங்கு நிர்வாகிகள்.. பூத் கமிட்டியால் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி.. தவிக்கும் அதிமுக!
சென்னை: அதிமுகவில் செயல்பட்டு வரும் மூன்றில் ஒரு பங்கு மாவட்டச் செயலாளர்கள் முறையாக பூத் கமிட்டி அமைக்காதது எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு சென்றுள்ளது. இதனால் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் தீவிரமாக இயங்குங்கள் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின் தமிழ்நாடு தேர்தல் களம் சூடு பிடிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அதிமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக உடனான கூட்டணி குறித்து பேசப்பட்டாலும், மாவட்டச் செயலாளர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை எடப்பாடி பழனிசாமி வழங்கியதாக தெரிகிறது. குறிப்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பாக 68,019 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் தலா 9 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அதிமுக மேலிட பார்வையாளர்கள் தலைமையில் அதிமுக ஐடி விங் மூலமாக ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் உள்ள அதிமுகவினர், ஆதரவாளர்களை கொண்டு ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்க அறிவுறுத்தி இருக்கின்றனர்.
எந்த நேரத்திலும் பூத் கமிட்டியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்பு கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு நிர்வாகிகள் முறையாக பூத் கமிட்டி அமைக்காதது குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில் 21 நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வார்னிங் கொடுத்துள்ளார்.
குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் அவ்வளவு ஆக்டிவாக இல்லை என்று எடப்பாடி பழனிசாமி காதுகளுக்கு தகவல் சென்றுள்ளது. வயது வரம்பு மற்றும் குற்றப் பின்னணி இல்லாதவர்களை பூத் கமிட்டியில் நியமிக்க எடப்பாடி பழனிசாமி கூறியதால், இந்தப் பணிகள் கடினமாக இருப்பதாக சிலர் புலம்பி இருக்கின்றனர். இதனால் இபிஎஸ் டென்ஷனில் இருப்பதாக விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர்.
-
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன்












Click it and Unblock the Notifications